பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பூர்ணசந்திரோதயம்-4 உதவியையும் பெற்று, தன்னை அற்ப முகாந்திரத்தின் மேல் சிறைப்படுத்தி, தனது சொந்தக் கடிதங்களை அபகரித்து, அவற்றின் மூலமாகத் தனது வரலாறுகளை எல்லாம் உணர்ந்து ஷண்முகவடிவின் இருப்பிடத்தையும் அறிந்துகொண்டு, ஏதோ தந்திரம் செய்து, அவளை அழைத்து வந்திருக்கிறார்கள் என்றும் கலியாணசுந்தரம் யூகித்துக் கொண்டான். தான் சிறைப்படுத்தப் பட்ட பின் ஒரு மாதத்திற்கு அதிக காலம் கழிந்து விட்டது என்பது அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. ஆகையால், அந்தத் தாதிப் பெண்கள் மூவரும் அதுவரையில் பூனாவுக்குப் போகாமல் கோலாப்பூரிலேயே இருந்திருப்பார்களா, அல்லது அபிராமியை மாத்திரம் அந்த ஊரில் நிறுத்திவிட்டு மற்றவர் பூனாவுக்குப் போய்த் தங்களது சதியாலோசனையை அந்நேரம் நிறைவேற்றி இருப்பார்களா என்ற சந்தேகமும் பெரும் கவலையும் ஒருபுறத்தில் எழுந்து வதைத்தன. அதைக் காட்டிலும் பதினாயிர மடங்கு அதிக பலமாக இன்னொரு கவலை எழுந்து அவனது மனதைக் கலவரப்படுத்தியது. அவ்விடம் வந்த நிஷ் கபடியான ஷண்முகவடிவு தானும், அபிராமியும் இருந்த சந்தேகாஸ் பதமான நிலைமையைக் கண்டும் பாராக்காரனும் அபிராமியும் சொன்ன கட்டுரைகளைக் கேட்டும் மூர்ச்சித்துக் கீழே வீழ்ந்ததைக் காண, அவள் தன்னை உண்மையிலேயே குற்றவாளி என்று நிச்சயித்துக் கொண்டாள் என்பது கலியாண சுந்தரத்தின் மனதில் உடனே பட்டுவிட்டது. தனக்கு விரோதமாக அத்தனை சாட்சியங்கள் நிதரிசனமாக ஏற்பட்டிருக்க, அவைகளைப் பொய் யென்று ருஜுப் படுத்துவதும், தான் நிரபராதி என்று ஸ்தாபிப்பதும் அசாத்தியமான காரியங்கள் என்பது அவனுக்கு உடனே தெரிந்துவிட்டது. ஆகையால், அந்த விஷயத்தில் அவனது மனதில் சகிக்க வொண்ணாத பெருத்த கவலையும் அச்சமும் ஏக்கமும் பொங்கி எழுந்தன. அவனது அங்கங்களெல்லாம் பதறிப் பறந்தன. தனக்கு நிகர் தானே என்று மதிக்கத் தக்க ஒப்பற்ற மாணிக்கமாகிய ஷண்முக வடிவைத் தான் இனி