பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3 வேண்டும். போனது போகட்டும்; நீங்கள் இப்போது என் பொருட்டு ஒரு காரியம் செய்தால், அதுவே போதுமானது. அந்தக் கடித சம்பந்தமாக சமீபகாலத்தில் நீங்கள் இளவரசரைப் பார்த்து அவரிடத்தில் அன்னியோன்னியமான பழக்கம் செய்து கொண்டிருப்பீர்கள் என்பது நிச்சயம். அவரும் உங்களிடம் அதிகமான பிரியம் வைக்கக்கூடிய சுபாவமுடைய மனிதரே ஆகையால், நீங்கள் எனக்காக ஒருதரம் போய் இளவரசரைப் பார்க்க வேண்டும். என் பேரில் போலீசார் பல குற்றங்களின் சம்பந்தமாக வாரண்டு பிறப்பித்திருக்கிறார்கள். நான் அவர்களுடைய கண்ணில் படாமல் ஒளிந்து திரிந்து கொண்டிருக்கிறேன். இனி போலீசார் தொடராதபடி என்மேல் யாதொரு குற்றமும் இல்லையென்று அவர்கள்தஸ்தாவேஜுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இளவரசர் மனசு வைத்தால் இந்தக் காரியம் ஒரு பெரிதல்ல; வெகு சுலபத்தில் முடிந்து போம். நான் இதுவரையில் செய்த குற்றங்கள் எல்லாம் ஒரு கூடினத்தில் நிவர்த்தியாகிவிடும். பிறகு, நான் போலீசாருக்குப் பயப்படாமல் சுயேச்சையாக வெளியில் வரலாம். நீங்கள் உங்கள் புருஷருக்குச் செய்ததுபோல, எனக்கும் இந்த உதவியைச் செய்து வைக்கவேண்டும். இது உங்களுக்கு ஒரு பிரயாசையான காரியமல்ல. உங்களுடைய வாய் வார்த்தையில் எல்லாம் அடங்கி இருக்கிறது. நீங்கள் சொன்னால், இளவரசர் அதை மீறி நடக்கக்கூடியவரல்ல. அவருக்கும் இது ஒரு பொருட்டல்ல ஆகையால், இந்த உதவியை நீங்கள் எனக்குச் செய்தே தீரவேண்டும்’ என்று நயந்து வற்புறுத்திக் கூறினான்.

அதைக்கேட்ட லீலாவதி முற்றிலும் திகைப்பும் கலக்கமும் அடைந்து, தான் அவனுக்கு என்னவிதமான மறுமொழி சொல்வது என்பதை அறியாதவளாய்ச் சிறிதுநேரம் சஞ்சலம் அடைந்திருந்தபின் அவனை நோக்கி, ‘ஐயா நீர்பிரஸ்தாபிப்பது நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. நானாவது உம்மைப்பற்றி இளவரசரிடம் சிபாரிசு செய்கிறதாவது. அது ஒருநாளும்