பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பூர்ணசந்திரோதயம்-4

மனத்தில் பெருத்த சண்டமாருதம் போல் எழுந்து நெடுநேரமாக வதைத்த விராவேசமும் பெருங்கோபமும், ஆச்சரியமும், அவமானமும் விசனமும் அவனது மனம் தாங்கக்கூடிய வரம்பை மீறி அபாரமாகப் பொங் கி எழுந்து கொண்டே இருந்தன. ஆகையால், அவனது மனம் தளர்ந்து சோர்வடைந்து இடிந்து முற்றிலும் உணர்வற்று உட்கார்ந்து போய்விட்டது. ஆகையால், திடீரென்று அவனது அறிவு பிறழ்ந்தது. கண்கள் இருளடைந்தன. மூளை கலங்கியது. சிரம் சுழன்றது. அதற்குமேல் அவ்விடத்தில் என்ன நிகழ்ந்தது என்பது அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. அவனது உடம்பு நின்றபடிவேரற்ற மரம்போல அப்படியே சடேரென்று தரையில் சாய்ந்து பிணம்போலாகிவிட்டது.


மறுபடி கலியாணசுந்தரம் தனது சுய உணர்வை அடைந்து கண்களை விழித்துப் பார்த்தகாலத்தில் அவன் இருந்த இடத்தில் அபிராமி காணப்படவில்லை. அந்த இடம் அவன் அதற்கு முன் அடைபட்டிருந்த அறையைப் போல் இல்லாமல், நிரம்பவும் வசதியானதாகவும், பெரிதாகவும் காணப்பட்டது. அவ்விடத்தில் தான் ஒரு சயனத்தின்மீது படுத்திருப்பதையும், தனக்கு அருகில் ஒரு வைத்தியரும், வேலைக்காரி ஒருத்தியும் ஆயத்தமாக இருந்து தனக்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்த தையும், கலியாணசுந்தரம் உணர்ந்து அதிக வியப்போடு நாற் புறங்களிலும் தனது பார்வையைச் செலுத்தினான். பழைய நினைவுகள் எல்லாம் உடனே அவனது மனதில் ஆற்று வெள்ளமெனப் பொங்கி எழுந்தன. ஒரு நொடியில் மனதை மயக்கி வசீகரப்படுத்தத் தக்க அபூர்வ அழகு வாய்ந்தவளாகத் தோன்றிய அபிராமி பெரும் பேய் போலத் தன்னைப் பிடித்துக் கொண்டு தான் எந்த வழியிலும் போக இயலாமல் தத்தளித்துத் தடுமாறும்படி செய்து ஒர் இரவு முழுதும் தன்னைச்சித்திரவதை செய்து உயிரோடு கொன்றதை நினைக்க நினைக்க, அப்போதும்