பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பூர்ணசந்திரோதயம்-4 உம்மை ராஜாங்க சம்பந்தமான சம்சயத்தின்மேல் நாங்கள் சிறைப்படுத்தி இருக்கிறோம். ஆகையால், நாங்கள் குறித்தபடி நீர் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தால் அன்றி நாங்கள் உம்மை வெளியில் அனுப்ப முடியாது. ஆகையால் நீர் அவளிடம் போயிருக்க வேண்டியதும் அவசியமானது; ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கவேண்டியதும் அதற்குமேல் அதிக அவசியமானது. நாளையதினம் உம்மை நான் அந்தப் பெண்ணினிடம் அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன். அதற்குள் நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்துச்செய்ய வேண்டும். இந்த விவரங்களை உம்மிடம் தெரிவிக்கவே நான் இங்கே வந்தேன்’ என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் கூறினார்.

அவர் சொன்ன வார்த்தைகளை எல்லாம் நிரம்பவும் கவனமாகக் கேட்டு வந்த கலியாண சுந்தரம் முற்றிலும் பிரமித்துப்போய் அவருக்குத் தக்கபடி தான் என்ன மறுமொழி சொல்வது என்பதை உணராமல் சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அவனது மனதில் தாங்க வொண்ணாத பெருத்த வியப்பும் கொதிப்பும் தோன்றின ஆகையால், அவன் நிரம்பவும் பதறி நின்றான். அபிராமி என்னும் பெண் இரவில் சுவரைக் குடைந்து கொண்டு தான் இருந்த அறைக்குள் வந்திருக்க, அதை முற்றிலும் மாற்றி தான் சுவரைக் குடைந்து கொண்டு அவள் இருந்த அறைக்குள் போனதாக அவர்கள் ஒரே கட்டுப்பாடாகச் சொல்வதைக் காண, அவனது மனதில் ரெளத்திராகாரமான பெருஞ்சினம் பொங்கி எழுந்தது. ஆனாலும், அவனது மனதில் அப்போதும் ஒரு பெருத்த சந்தேகம் உதித்துக்கொண்டே இருந்தது. சுவரைக் குடைந்து கொண்டு அவள் வந்த விஷயத்தைப் பாராக்காரனும் அபிராமியும் மாற்றிச் சொல்லுகிறார்கள் என்பதை போலீஸ் கமிஷனர் அறிந்துகொண்டே மறைத்துப் பேசுகிறாரா, அல்லது, பாராக்காரனும், அபிராமியும் சொல்வதை உண்மை என்றே நம்பி அவ்வாறு பேசுகிறாரா என்ற ஒரு சந்தேகம் மாத்திரம்