பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பூர்ணசந்திரோதயம்-4 புத்தி இல்லையென்றும் நினைத்துக் கொண்டீரோ? ஷண்முக வடிவு என்னும் பெண் இப்போது எங்கே இருக்கிறாள் என்றும், என்ன நிலைமையில் இருக்கிறாள் என்றும் நீர் எதற்காகக் கேட்கிறீர்? அப்படி நீர் கேட்பதற்கு உமக்கு என்ன உரிமை இருக்கிறது? அவைகளுக்கெல்லாம் நான் உத்தரம் சொல்ல வேண்டுமென்பது என்ன கட்டாயமோ தெரிய வில்லை. நான் முடிவாக உம்மிடம் ஒரே வார்த்தையில் என் கருத்தைச் சொல்லிவிடுகிறேன். அதன்படி நீர் நடக்க வேண்டியதைத் தவிர, நீர் செய்யக்கூடியது வேறே ஒன்றுமில்லை. நீர் என்னிடத்தில் தாறுமாறான வார்த்தைகள் உபயோகித்தால், இனி நான் கொஞ்சமும் இரக்கமென்பதே காட்டப்போகிறதில்லை. நியாயாதிபதியின் தீர்மானத்தின்படி நான் உம்மை அபிராமியின் வசத்தில் ஒப்புவிக்கக் கடமைப் பட்டவனாய் இருக்கிறேன். நீர் ராஜாங்க சம்பந்தமான கைதி. ஆகையால், உம்மிடம் நான் ஒப்பந்தம் எழுதி வாங்கிக்கொண்டு தான் உன்மையில் அவளிடம் அனுப்ப வேண்டும் ஆகையால், நீர் அதற்கு இணங்கியே தீரவேண்டும். இதுதான் என்னுடைய முடிவான வார்த்தை; நீர் என்ன சொல்லுகிறீர்? ஒப்பந்தத்தில் கையெழுத்துச் செய்கிறீரா?’ என்றார்.

அவர் சொன்ன வார்த்தைகளைக்கேட்ட கலியாணசுந்தரம் நிரம்பவும் பிரமித்துப்போய்ச் சிறிதுநேரம் மெளனமாக நின்றுவிட்டான். அபிராமி செய்த சூழ்ச்சியின் உண்மை யெல்லாம் போலீஸ் கமிஷனருக்குத் தெரிந்திருக்குமா இருக்காதா என்ற சந்தேகம் மறுபடி எழுந்து அவனது மனதைக் குழப்பியது. ஆனாலும், அவரும் அதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமென்ற எண்ணமே மேலாடுகின்றது. தான் அபிராமி யைத் தனது சம்சாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தன்னை எந்த நியாயாதிபதியும் கட்டுப்படுத்த முடியாது என்றும் எண்ணம் அவனது மனதில் உறுதியாகவும் தெளிவாகவும் பட்டது. ஆகையால், தான் அந்த நியாயாதிபதியினது