பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 95 தீர்மானத்தை நேரில் படித்துப் பார்க்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் சொன்னால், அவ்வளவு தூரம் சதியாலோசனை செய்யத் துணிந்தவரான அந்த அயோக்கிய மனிதர் கற்பனையாக ஒரு தீர்மானம் தயாரித்துக் கொணர்ந்து காட்டப் பின்வாங்க மாட்டார் என்ற எண்ணம் உதித்தது. ஆகையால் தனக்கு அந்தத் தீர்மானத்தைக் காட்டும் படி அவரிடம் கேட்டுக்கொள்ள அவன் விரும்பவில்லை. ஆகவே, அவன் போலீஸ் கமிஷனரை நோக்கி உறுதியாகவும் திடமாகவும் பேசத் தொடங்கி, “ஐயா! உங்களிடத்தில் நான் என்னுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லுவது வீண் பிரயத்தனம் என்றே நினைக்கிறேன். மனிதர் நடுநிலைமை தவறாதிருந்து, இரண்டு கட்சிக்காரர்களையும் விசாரித்து, உண்மை எது, பொய் எது என்பதை உள்ளபடி அறிந்து கொண்டு நீதி செலுத்த வேண்டும் என்ற மேன்மையான மனப்போக்குடையவராக இருந்தால், அவரிடம் நான் என்னுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லலாம். ஒரு கட்சியில் சேர்ந்துகொண்டு எதிர்க் கட்சிக்காரருக்கு வேண்டும் என்றே அக்கிரமம் செய்யத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் மனிதரிடத்தில் நான் ஆயிரம் எடுத்துச்சொன்னாலும், அது செவிடனுடைய காதில் சங்கை ஊதுகிறது போன்றதன்றி வேறல்ல. ஆகையால், நான் இனி உங்களிடம் அதிகமாய்ப் பேச இஷ்டமில்லை. நீங்கள் என்னை எப்படிப்பட்ட கொடுமை களுக்கும் அக்கிரமங்களுக்கும் ஆளாக்கலாம். நான் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்துச் செய்யமாட்டேன். அபிராமி என்ற பெண்ணையும் நான் சம்சாரமாக ஏற்றுக்கொள்ள சாத்தியப்படாது. நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் பலாத்காரம் செய்து கொள்ளலாம்; நான் என் மனசார எதற்கும் இணங்க மாட்டேன்’ என்று அழுத்தமாகவும் முடிவாகவும் கூறினான்.

அதைக்கேட்ட போலீஸ் கமிஷனர் கோபநகை நகைத்து,

‘ஒகோ! அப்படியா சங்கதி நீர் எதற்கும் இணங்கிவர H.&.}V-7