பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பூர்ணசந்திரோதயம்-5 என்னால் உன்தேகம் களங்கப்படுவது மாத்திரம் தகாததாகுமா பல நாளைய வியாதிக்கு ஒரே மருந்தாக, நான் உன்னை இன்று என்னுடைய மனைவியாக்கியே விடத் தீர்மானித்து விட்டேன். நீ எப்படிப்பட்ட நியாயத்தை எடுத்துச் சொன்னாலும், அது என் காதில் படப்போகிறதேயில்லை. ஏன் நீ iணில் பிரயாசைப் படுகிறாய். அவசியம் நீ செய்யப்போகும் காரியத்தைக் கசந்து கொண்டு செய்வதிலும், சந்தோஷமாகச் செய்வது இரு திறத்தாருக்கும் சிலாக்கியமானது. ஆகையால், பதில் பேசாமல், நான் சொல்லுகிறதுபோல நடந்துகொள். இந்த அறையின் கதவு வெளியில் தாளிடப்பட்டிருக்கிறது. ஆகையால், நீ இதைத் திறந்துகொண்டு வெளியில் போகமுடியாது. இது இந்த மடத்தின் நடுப்பாகத்திலுள்ள அறை. ஆகையால் நீ எவ்வளவு தான் கூச்சலிட்டாலும் அந்த ஒசை வெளியில் கேட்காது. ஆகையால், இன்று நீ தப்பிப்போவது சாத்தியமில்லை. பேசாமல் பக்கத்தில் வந்துவிடு’ என்று நயமாகவும் அன்பாக வும் கூறினார். -

அதைக்கேட்டஷண்முகவடிவு மறுபடியும் பேசத் தொடங்கி, “ஐயா! இது கொஞ்சமும் அடாது. நான் தனியா இங்கு வந்து அகப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்றும், நான் கத்தினால் கூட எனக்கு உதவிக்கு யாரும் வரமாட்டார்கள் என்றும் தாங்கள் நினைத்து இப்படிப்பட்ட அக்கிரமத்தில் இறங்குவது பிசகு. தாங்கள் எவ்வளவோ படித்துத் துறவறம் பூண்டிருந்தும், முக்கியமான ஒரு சங்கதியை மறந்துவிட்டீர்கள். அணுமுதல் - அண்டாண்ட பிரமாண்டம் வரையிலுள்ள எண்ணிலடங்காத கோடானுகோடி வஸ்துக்களையும் படைத்து, ஒவ்வொன்றின் காரியங்களையும் தேவைகளையும் rேமத்தையும் கவனித்துக் காத்து முடிவில் அழித்து வருகிறவரும், சகல வஸ்துக்களிலும் அந்தர்யாமியாய் நிறைந்து உயிருக்குயிராய் நிற்பவருமான கடவுள் இப்போது இவ்விடத்தில் மாத்திரம் இல்லையென்று நீங்கள் எண்ணுகிறீர்கள் போலிருக்கிறது. கடவுளால் நமக்கு ஏதேனும் காரியம் ஆகவேண்டியிருந்தால், நாம் அவரை