பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கே. துரைசாமி ஐயங்கார் - 1 19 அடித்தோ, அல்லது வேறு ஏதாவது செய்தோவதைக்கவும் என் மனம் இடம் தரவில்லை. ஆகையால், இவளை இப்படியே இந்தப் பாயில் வைத்துச் சுற்றி கயிறுகளைப் போட்டு மூட்டையாகக் கட்டித் தூக்கிக்கொண்டு வெகு தூரத்துக்கு அப்பால் போய், எங்கேயாவது போட்டுவிட்டு வந்து விடுகிறேன். இவள் அநேகமாய் உயிர் பிழைத்து எழுந்திருக்க மாட்டாள். யாராவது அந்த மூட்டையைப் பார்த்து ஆச்சரிய மடைந்து அதற்குள் என்ன இருக்கிறதென்று பார்க்க ஆவல் கொண்டு அதைப் பிரித்துப் பார்ப்பார்கள். அதற்குள் ஒரு பிணம் இருப்பதைக்கண்டு அவர்கள் பயந்து உடனே போலீசாரிடம் போய் விஷயத்தைத் தெரிவிப்பார்கள். போலீசார்வந்து இவளை எடுத்துப் போய் அநாதைக் கொள்ளிப் போட்டுக் கொளுத்தி

விடுவார்கள்’ என்றார்.

கிழவி, ‘இவள் சாகாமல் பிழைத்திருந்தால், என்ன செய்கிறது? அப்போது இவள் உண்மையைச் சொல்லிவிடுவா

ளல்லவா?’ என்றாள்.

பண்டாரம், ‘இவள் இனி பிழைப்பதே சந்தேகம். ஒருவேளை இவள் பிழைத்துக் கொள்வாளானால், இவள் தனக்கு நேர்ந்த விபத்தை அப்படியே வெளியிட அநேகமாய் வெட்கப்பட்டு மறைத்து விடுவாள். அல்லது, இவள் உண்மையே தெரிவித்தாலும், அதனால் நமக்கு யாதொரு கெடுதலும் உண்டாகாது. முதலில் நம்முடைய இந்த மடம் எங்கே இருக்கிறதென்பதே இவளுக்குத் தெரியாது. இது ஊருக்குக் கிழக்கிலிருக்கிறது; இவளை நான் ஊருக்கு மேற்கில் வெகுதூரத்துக்கப் பால் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்துவிடப் போகிறேன். ஆகையால், இவள் தனக்கு ஏதோ ஒரு மடத்தில் விபத்து நேர்ந்ததாகச் சொல்வாளே அன்றி, இந்த இடத்தைக்காட்ட இவளுக்கு அடையாளம் தெரியாது. அதற்குள் நாம் இந்தப் புடவை எரிந்து விழுந்திருக்கும் கரியையெல்லாம் சுத்தமாக எடுத்துப் பெருக்கி இந்த அறையில் சந்தேகாஸ்