பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 125 இல்லை. இப்படிப்பட்ட சிலாக்கியமான அழகுடைய பெண்ணுக்கு எதனால் இந்தக்கதி வந்ததோ தெரியவில்லையே! இவள் எங்கே இருப்பவளோ என்னவோ ஒன்றும் தெரிய வில்லையே! இவள் ஒருவேளைதன்புருஷனுக்குத் தெரியாமல் ஏதாவது துரோகம் செய்ததைப் புருஷன் கண்டு அடித்து இவள் இறந்துபோய் விட்டாள் என்று நினைத்துப் பாயோடு வைத்துக்கட்டி இப்படிக் கொண்டுவந்து போட்டிருப்பான் போலிருக்கிறது. இமைகள் அசைகின்றனவே! மூச்சும் வருகிறது. இவள் மூர்ச்சித்துக் கிடக்கிறாள் போலிருக்கிறது” என்ற கூறிய சமயத்தில் ஷண்முகவடிவு மெதுவாகத் தனது கண்களைத் திறந்து பார்த்துத் தனது பார்வையை நாற்புறங் களிலும் திருப்பி மருளமருள விழித்த பிறகு மறுபடி இமைகளை மூடிக்கொண்டாள். அவள் உயிரோடிருக்கிறாள் என்பதைக் கண்ட ஹேமாபாயி அவளைப் பிழைக்கச் செய்ய வேண்டு மென்ற உறுதி செய்துகொண்டு, உடனே திருப்பி வாசற்கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டாள்.

கால் நாழிகை சாவகாசம் கழிந்தது. ஷண்முகவடிவின் முகத்தின் வெளிறு சிறுகச் சிறுக விலகியது. இரத்த ஒட்டமும் pவகளையும் திரும்ப ஆரம்பித்தன. கைகால்களெல்லாம் அசைவு கொடுத்தன. பக்கத்தில் இருந்தவர்கள், மடத்திலிருந்த வர்களா அல்லரா என்பதை ஆராய் பவள்போல, அவள் தனது திருஷ்டியை நாற் புறங்களிலும் செலுத்தி ஆராய்ந்தவுடன் மெதுவாகத் தனது அதரத்தைத் திறந்து, ‘குடிக்க ஜலம்’ என்று கூறிவிட்டுத் தனது இமைகளை மறுபடியும் மூடிக் கொண்டாள்.

உடனே வேலைக்காரி ஒடோடியும் உட்புறம் சென்று ஒரு பாத்திரத்தில் தண்ணிர் எடுத்து வந்து ஷண்முக வடிவின் வாய்க்கருகில் பிடித்து, ‘அம்மா! இதோ ஜலம் கொண்டு வந்திருக்கிறோம். வாயைத் திற’ என்றாள்.

உடனே ஷண்முகவடிவு தனது வாயைக் கொஞ்சமாகத் திறக்க, வேலைக்காரி தண்ணிரை சிறுகச் சிறுக வாய்க்குள்