பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பூர்ணசந்திரோதயம் - 5 சொந்தஊர் திருவாரூர். இந்த ஊரில் எங்களுடைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வீட்டுக்கு என் தமக்கை வந்திருக்கிறாள். அவளைப் பார்க்க வேண்டுமென்று நான் இந்த ஊருக்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்குப் பலவிதமான அபாயங்கள் நேரிட்டன. தெய்வானுகூலத்தால், நான் அவைகளிலிருந்து தப்பிக் கடைசியில் ஒரு மடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே ஒரு கிழவி இருந்தாள். நான் அவளோடு பேசி இரவு முழுதும் அந்த மடத்தில் நான் படுத்துக் கொண்டிருக்க அனுமதி கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அவள் பார்வைக்கு நிரம்பவும் நல்லவளாகக் காணப்பட்டதோடு என்னை அவள் அன்பாக உபசரித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். முதல் கட்டில் தனியான ஒர் அறையில் பாய்களை விரித்து அவள் என்னையும் படுக்கச் செய்து தானும் படுத்துக் கொண்டாள். அவளுடைய சகோதரர் ஒருவரும் தானும் அந்த மடத்தில் இருந்து வருவதாகவும், அவர் காஷாயம் வாங்கிக் கொண்ட சாமியார் என்றும், அவர் இரண்டாவது கட்டில் படுத்திருப்பதாகவும் அவள் தெரிவித்தாள். கொஞ்சநேரம் படுத் திருந்த பிறகு அவள் தூங்குவதுபோலக் காணப்பட்டாள். எனக்குத் தூக்கம் பிடிக்க வில்லை. அப்படியே உறங்கிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் கிழவி எழுந்து ஒன்றுக்குப் போவதாகச் சொல்லி விட்டு மெதுவாக வெளியில் போய் விட்டாள். பிறகு அவளுக்குப் பதிலாக அந்தப் பண்டாரம் வந்து என் பக்கத்தில் படுத்து காலைத்துக்கி என்மேல் போட்டு கைகளால் என்னைப் பிடித்துக்கட்ட எத்தனித்தார். நான் உடனே சந்தேகித்து சடக்கென்று எழுந்தேன். நல்ல வேளையாக நான் ஒரு நெருப்புப் பெட்டியை எடுத்து வைத்திருந்தேன். கிழவி கொண்டுவந்து வைத்திருந்த விளக்கும் எனக்குப் பக்கத்தில் இருந்தது. ஆகையால், நான் உடனே ஒரு நெருப்புக் குச்சியை எடுத்துக் கிழித்து விளக்கைப் பற்ற வைத்தேன். எனக்கெதிரில் சாமியார் நிற்கிறார். அந்தச் சாமியார் அதற்குமுன் திருவாரூருக்குப்