பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 133 வைத்தியரிடம் வரும்போதே தெரிவித்துவிட்டாள். ஆதலால், அவர் எவரிடத்திலும் எவ்விதத் தகவலும் கேளாமல் நேராகப் போய் ஷண்முகவடிவின் கை நாடியையும் உடம்பின் இரணங் களையும் சோதனை செய்து பார்த்தபின் ஹேமாபாயியை நோக்கி, ‘அம்மா இந்தப் பெண்பிழைப்பது சந்தேகம். இன்னம் மூன்று தினம் வரையில் இவள் உயிரோடிருந்தால் அதற்குமேல் இவள் பிழைத்துக்கொள்வாள். அதற்குமுன் எதையும் நான் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை’ என்றார்.

அதைக்கேட்ட ஹேமாபாயினது முகம் வாட்டமடைந்தது. அவள் மிகுந்த கவலையும் சஞ்சலமும் அடைந்தவளாய், “அப்படியா இவள் பேசியதையும் முகத்தின் களையையும் பார்த்து இவள் பிழைத்துக்கொள்வாள் என்றல்லவா நான் தைரியமாக நினைத்தேன். இவள் பிழைத்துக் கொண்டால் எல்லாம் நன்மையாக முடியும். இவள் நம்முடைய வீட்டிலிருந்தபடி இறந்துபோனால் நம்முடைய விரோதிகள் இதைப் போலீசாருக்குத் தெரிவித்து நம்மைத்துன்பத்தில் மாட்டி விடுவார்கள். இப்படிப்பட்ட அபாயமான நிலைமையில் இருக்கும் இந்தப் பெண்ணை ஜீவகாருண்யம் இல்லாமல் போலீசாரிடம் ஒப் புவித்து விடவும் எனக்கு மனமில்லை. இவளைவைத்துக்கொண்டிருந்தாலும் எனக்கு ஏதாவது துன்பம் உண்டாகும் போலிருக்கிறது. என்ன செய்வதென்பது தெரிய வில்லை. ஆனால் நீங்கள் இவளுக்கு யாதொரு மருந்தும் போடாமல் மூன்றுநாள் வரையில் இப்படியே விட்டுவிடவா சொல்லுகிறீர்?’ என்றாள்.

வைத்தியர், ‘அப்படி அல்ல. நாம் செய்ய வேண்டிய சிகிச்சை களைச் செய்துகொண்டே போவோம். அநேகமாய் இவள் பிழைத்துக்கொள்ளலாம். ஒருவேளை இவளுடைய ஆயுசு முடிந்து இறந்துபோனால் பிறகு நாமென்ன செய்யலாம்! போலீசாருக்காக இந்த அபாய வேளையில் நீங்கள் பயப்படுவது சரியல்ல. உங்களுக்கு அனுகூலமாக சாட்சி சொல்ல நான்