பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 . பூர்ணசந்திரோதயம்-5 அதைக்கேட்ட இளவரசர் வேடிக்கையாக நகைத்து, ‘நீ பேசுவது நிரம்பவும் வேடிக்கையாக இருக்கிறதே! உன்னிடம் இந்த விஷயத்தைத் தெரிவிக்காமல் இவர்கள் உன்னை இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் என்ன? இப்போது நீ விஷயத்தைத் தெரிந்து கொண்டாயல்லவா! உனக்கு இன்னம் கலியாணம் ஆகவில்லை யென்று நீயே ஒப்புக்கொள்ளுகிறாய். வேறொருவரைக் கலியாணம் செய்துகொண்டிருப்பவள் அவரைவிட்டு இன்னொருவரை நாடுவது பிசகுதான். கன்னிகைப் பெண்ணா யிருக்கும் நீ என்னைக்கலியாணம் செய்து கொள்ளுவதில் என்ன அநீதி இருக்கிறது? ஒன்றுமில்லை. இதோ இன்னம் இரண்டு தினங்களில் நான் பூர்ணசந்திரோதயம் என்ற தார்வார் ராஜகுமாரியைக் கலியானம் செய்துகொள்ளப் போகிறேன். அதே முகூர்த்தத்தில் உன்னையும் நான் பாணிக்கிரகணம் செய்துகொள்ளுகிறேன். நீ உத்தம குணங்களும், தர்ம நியாயப்படி நடக்கவேண்டுமென்ற மனவுறுதியும் உடைய வளாக இருக்கிறாய். ஆகையால், தாசி வேசிகளை நடத்துவது போல, உன்னை நடத்தநான்பிரியப்படவில்லை. உன்னைநான் சாஸ்திரப்படி மணந்து பட்டமகிஷி ஆக்குகிறேன். வேண்டு மானால், நான் உனக்குப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்” என்றார்.

ஷண்முகவடிவு சிறிதுநேரம் தயங்கியபின், ‘மகாராஜாவே எல்லா நியாயமும் அறிந்த தங்களிடம் நான் அதிகமாக நியாயம் எடுத்துச் சொல்வது சரியல்ல. எனக்குக் கல்யாணம் ஆகாவிட்டாலும், இன்னார்தான் எனக் குப் புருஷர் என்ற தீர்மானம் ஏற்கெனவே ஏற்பட்டுப் போயிருக்கிறது. நாம் கடையில் வாங்கும் கேவலம் உயிரற்ற சாமானைக் கூட, ஒருவரிடம் விலைபேசி அவருக்குக் கொடுப்பதாகச் சொல்லி விட்டால், இன்னொருவர் வந்து,அதை விட ஆயிரம் பதினாயிரம் அதிகமாகக் கொடுப்பதாகச் சொன்னாலும் அந்த