பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 25 i தமது மனத்தை லயிக்க விடுத்து மதிமயக்கம் அடைந்து அத்தகைய ஏந்தெழில் மயிலைத் தாம் அடையக் கொடுத்து வைத்ததை எண்ணி எண்ணிப் பூரிப்படைந்து எவ்விதத்திலும் அவள் தமக்குச் சக்கரவர்த்தினியாய் இருக்கத் தக்கவள் என்று எண்ணமிட்டவராய்ப் புரோகிதர் சொற் படி கலியாணச் சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பூர்ணசந்தி ரோதயத்தின்மனநிலைமையோ இன்னதென்று விவரித்துக் கூற இயலாத அசாத்திய நிலைமையாக இருந்தது. அம்மணிபாயி, சாமளராவ் முதலியோரது சூழ்ச்சியின் பலனாகத் தான் மற்ற எவருக்கும் கிட்டாத பட்டமகிஷி நிலைமையை அடையப் போவதைப் பற்றியும், அத்தனை வைபவங்களின் இடையில் தான் அரசருக்குச் சமமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் குறித்தும் அவள் அளவற்ற ஆனந்தமும், மனவெழுச்சியும் கொண்டு மெய்மறந்து பூத உடம் போடு சுவர்க்க லோகம் அடைந்தவள் போலப் பேரின்பசாகரத்தில் கிடந்து மிதந்தாள். ஆனாலும், இடையிடையில் அவளது மனம் பூனாவிலிருந்த லலிதகுமாரி தேவியின் விஷயத்தில் செய்யப்பட்ட பெருத்த சதியைப்பற்றி நினைத்து நினைத்து இரக்கம்கொண்டு வருந்தித் தவித்து, பிறருக்கு எவ்வித தீங்குமின்றித் தனக்கு அத்தகைய பெருத்த பாக்கியம் கிடைக்கும்படி சர்வேஸ்வரன் செய்திருக்கக் கூடாதாவென்று எண்ணமிட்டு உருகியது. ஆனால், அவளால் விலக்க இயலாத பெருத்த ஆசையான சண்டமாருதம் அவளை ஒரு சருகுபோலத்தள்ளிக்கொண்டு போனது. ஆகையால், அந்த வஞ்சக வலையிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு வெளிவர மாட்டாதவளாய் அந்தப் பெண்மணி அதற்கு உடந்தையாய் இருந்து, எப்போது இளவரசர் தனது கழுத்தில் பொட்டுக் கட்டுவார் என்று எதிர்பார்த்து ஆவலாகிய பெருத்த அக்கினியால் தகிக்கப்பட்டவளாய் இருந்தாள். அந்த நிலைமையில் இளவரசர் பூர்வாங்கமான சகல சடங்குகளையும் நிறைவேற்றித் திருமாங்கல் யதாரணம் செய்வதற்காக நவரத்னமாய் விளங்கிய பொட்டைக்கையிலெடுத்துக் கொண்டு