பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 255

கலியாண சுந்தரத்தைப் பிடித்துக்கொண்டிருந்த இரண்டு பாராக்காரர்கள், அவனுக்கு இரண்டு பக்கங்களிலும் நின்றபடி, அவனை நடாத்தி அழைத்துக்கொண்டு இளவரசர் மாங்கலிய மும் கையுமாக நின்ற இடத்திற்கு அருகில் நிறுத்தினார்கள். எதிர்பாரா வகையில் திடீரென்று தோன்றிய அந்த சம்பவம் எப்படி முடியுமோ என்ற ஆவலினால் தூண்டப்பட்டவராய் சகல ஜனங்களும் வியப்பே வடிவாகவும் சித்திரப்பாவைகள் போல அசைவற்றம் இருந்தபடி கலியாண சுந்தரத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

மங்களகரமான சுபகாரியம் நிறைவேறும் சரியான தருணத்தில் அவ்வாறு அநாகரிகமாகக் கூச்சலிட்டுக் கொண்டு வந்து அந்தக் காரியத்திற்குத்தடை செய்யக் கூடியவன்யாராவது பைத்தியக்காரனாகத் தான் இருக்க வேண்டுமென்று முதலில் இளவரசர் முதலிய சகல ஜனங்களும் எண்ணி நிரம்பவும் ஏளனமாகக் கலியாணசுந்தரத்தைப் பார்த்தனர். ஆனாலும், அடுத்த rணத்தில் அந்த எண்ணம் மாறிப் போய்விட்டது. கலியாணசுந்தரம் யெளவன பருவமும், மன்மதனைப் பழித்த உயர்தர அழகும், கம்பீரத்தோற்றமும், பெருந் தகைமையும், நற்குணங்களும், ஜ்வல்லித்த முகவிலாஸ்மும் நிரம்பியவனாய் இருந்ததைக் காணவே, அவனைப் பற்றிய இளக்கரமான அபிப்பிராயம் மாறியது. அவன் யாராக இருப்பான் என்ற சிந்தனை எழுந்தது. அவன் ஒருகால் லலிதகுமாரி தேவிக்கு வேண்டிய மனிதனாக இருப்பானோ என்ற நினைவுண்டா யிற்று.

திருமாங்கல் யதாரணத்திற்காக பூர்ணசந்திரோதயத்திற்கு எதிரில் போய் நின்ற இளவரசர், கலியாணசுந்தரம் தமக்கருகில் அழைத்து வந்து நிறுத்தப்பட்டவுடனே அவ்விடத்தைவிட்டு வந்து தமது சிம்மாசனத்திற்குப் போய் அதன்மீது கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு நிரம்பவும் கோபமான பார்வையாகக் கலியாணசுந்தரத்தைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். .3F.V-17