பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பூர்ணசந்திரோதயம் - 5 ஆரம்பத்தில் இளவரசருடைய தேகத்தினால் மறைக்கப் பட்டிருந்த பூர்ணசந்திரோதயம் அவர் அப்பால் போனவுடன் நன்றாக எல்லோரது திருஷ்டியிலும் பட்டாள். ஆரம்பத்தில் கலியாணசுந்தரத்தைப் பார்த்துத் திகில் கொண்டு மயங்கிச் சாய்ந்த பூர்ணசந்திரோதயம், தான் அவ்வாறு இருப்பது சந்தேகத்திற்கு இடங் கொடுக்குமென்று நிரம்பவும் துணிவு கொண்டு தனது தேகத்தையும் மனதையும் நிதானப்படுத்திக் கொண்டு தனது இயற்கைத் தோற்றத்தை அடைந்தவளாய் நாணிக் குனிந்த வண்ணமிருந்தாள். அவள் இளவரசருக்கு அருகில் நிரம்பவும் நெருங்கி பக்கத்தில் இன்னொரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தாள் ஆதலால், இளவரசரோடு பேசும் கருத்தோடு அவரது முகத்தைப் பார்த்த கலியான சுந்தரத்தின் பார்வை தற்செயலாக பூர்ணசந்திரோதயம் இருந்த பக்கத்தில் சென்றது. எப்படி எனில், யாரோ ஒரு பெண்ணைப் பட்டமகிஷியாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அம்மன் பேட்டைக் கூத்தாடிச்சி தனது பெண்களைப் பூனாவிற்கு அனுப்பி லலிதகுமாரி மீது பொய்யான அவதூறு சுமத்த முயன்றாள் என்பதை அவன் அறிந்தவன். ஆதலால், அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டுமென்ற ஒரு விருப்பம் அவனை மிஞ்சி எழுந்தது. ஆகையால், அவன் தனது கடைக்கண்ணால் பூர்ணசந்திரோ தயத்தைப் பார்த்தான். பார்க்கவே, அவன் திடீரென்று பாம்பின் மேல் காலை வைத்துவிட்டவன் எவ்வாறு துள்ளிக் குதிப்பானோ அவ்வாறு திடுக் கிட்டுத் துள்ளிக் குதித்தான். ‘ஆகா! கமல மல்லவா உட்கார்ந்து கொண்டி ருக்கிறாள்!’ என்று தனக்குத்தானே மெதுவாகக் கூறிக் கொண்டான். தனது சந்தேகம் பொய்யானதோ மெய்யானதோ என்பதை நிச்சயிக்கும் பொருட்டு அவன் அவளை இன்னொரு முறை நன்றாகப் பார்த்தான். கமலமே ராஜஸ்திரீபோல அலங்கரித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் என்ற நிச்சயம் ஏற் பட்டது. உடனே அவன் சித்தப் பிரமை கொண்டவன் போலானான். வந்தபோது அவனிடம் காணப்பட்ட பலத்த