பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பூர்ணசந்திரோதயம் - 5 பழகிய மனிதராயிற்றே என்றும், பெரிய மனிதருடைய புத்திரராயிற்றே என்றும், நான் உம்மிடம் பிரியமாக நடந்து கொண்டால், அதற்குப் பிரதியாக நீர்தாறுமாறாகப் பேசுகிறீரே! எனக்கு உம்முடைய ரகசியமும் வேண்டாம். உம்முடைய தயவும் வேண்டாம். நீர் முதலில் இந்த மண்டபத்தைவிட்டு வெளியில் போம். உம்முடைய ரகசியத்தை நான் பிற்பாடு சாவகாசமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன்’ என்று முடிவாகவும் கடுகடுத்த முகத்தோடும் கூறிவிட்டு மாங்கல்யமும் கையுமாக மறுபடியும் பூர்ணசந்திரோதயத்தண்டை நெருங்கினார். அவரது சொற்களைக் கேட்ட பாராக்காரர்கள் நீலமேகம்பிள்ளையை முன்னிலும் அதிக வலுவாகப் பிடித்திழுக்கத் தொடங்கி னார்கள். அவர் சிறிது நேரம் பொறுக்கும்படி அவர்களிடம் நயந்து வேண்டிக் கொண்டு திரும்பவும் இளவரசரைக் கூப்பிட்டு, ‘மகாராஜாவே தாலி கட்ட வேண்டாம்; உங்கள் குலகுருவின்மேல் ஆணையிட்டுத் தடுக்கிறேன். அந்தக் காரியம் செய்ய வேண்டாம். செய்தால் நீங்கள் பெருத்த பாவத்துக்கு ஆளாக வேண்டும்” என்றார். -

நல்ல சுபவேளையில் அவர் ஆணையிட்டுத் தடுத்ததைக் கேட்ட ஜனங்களெல்லோரும் கோபத்தினால் பதறித்துடித்தனர். ஆனாலும், நீலமேகம்பிள்ளை பெருத்த சமஸ்தானாதிபதியின் புத்திரரென்ற மதிப்பினாலும் அச்சத்தினாலும், எல்லோரும் ஒருவாறு தங்களை அடக்கிக்கொண்டு அவர் அகாரணமாக ஏன் அப்படிப்பட்ட பிடிவாதம் செய்கிறார் என்று நினைத்துப் பெரிதும் வியப் புற்று பிரமித்திருந்தனர். நீலமேகம் பிள்ளை ஆணையிட்டுத் தடுத்ததைக் கேட்ட இளவரசர் ரெளத்திரா காரமான கோபம் கொண்டு அடக்கவொண்ணாத ஆத்திரத் தோடு திரும்பி நீலமேகம் பிள்ளையைப் பார்த்து உருட்டி விழித்து, “ஆகா! உமக்கு உண்மையில் பைத்தியம் பிடித்திருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன், இல்லா விட்டால், சுய அறிவோடிருக்கும் எந்த மனிதனாவது, இப்படிப்பட்ட