பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 27 வைக்கப்பட்டிருந்தது. நான் அந்தக் கதவை மெதுவாகத் திறந்து கொண்டு தலையை மாத்திரம் இடைவெளியில் நீட்டி உட்புறத்தில் பார்த்தேன். ஆகா உள் பக்கத்தில் தென்பட்ட காட்சியை நான் என்னவென்று சொல்லுவேன்! நானும் என் மனைவியும் சயனித்துக்கொள்ளும் மஞ்சத்தின் மேல் என் மனைவியும் இளவரசரும் சயனித்துக் கொண்டிருந்த விகாரக் காட்சி என் கண்ணில் பட்டது. சிறிதுநேரம் வரையில் அந்தக் காட்சி சொப்பனத்தின் காட்சியென்றே நான் எண்ணி என் கண்களையே நம்பாமல் பிரமித்து ஸ்தம்பித்து அப்படியே நின்று விட்டேன். அதுவரையில் என்னிடம் உயிருக்குயிராக இருந்து, மகா பரிசுத்தமாக நடந்துவந்த அவர்களிருவரும் அப்படிப்பட்ட பரம துரோகமான காரியத்தில் இறங்குவார்களா? என்ற சந்தேகமே அப்போதும் என் மனசில் எழுந்து போராடத் தொடங்கியது. அதுவுமன்றி, நான் அந்தத் தடவை ஊரைவிட்டுப் போயிருந்த காலத்திற்குள் அவர்களுக்கு அப்படிப்பட்ட துர்பழக்கம் ஏற்பட்டிருக்குமா, அல்லது அதற்குமுன் நெடுங்காலமாகவே அவர்களுக்கு அது ஏற்பட்டி ருக்குமோ என்ற சந்தேகமும் உதித்தது. வெளிப்பார்வைக்கு தத்ரூபம் மகாலக்ஷ சமிபோலவே இருப்பவளும், அதுவரையில் என்னை உயிருக்குயிராக மதித்து வந்தவளுமான அவள் அன்னிய புருஷனைத் தொட எப்படி மனத் துணிவு அடைந்திருப்பாள் என்ற சந்தேகமே பெரிதாக எழுந்து என்னை வருத்தியது. அவர்களிருவரும் ஒன்றாகப் படுத்திருந்ததைக் காணவே, ரெளத்ராகாரமான கோபம் என் மனசில் பொங்கி எழுந்தது. என் தேகம் கட்டிலடங்காமல் பதறியது. உள்ளே படுத்திருந்தது இந்த ராஜ்யத்தின் வருங்காலத்து மகாராஜா என்பதை அடியோடு மறந்துவிட்டேன். அவருக்குப் பக்கத்தில் படுத்திருப்பவள் அதுவரையில் நான் குலதெய்வமாக வைத்துக் கொண்டாடிய இன்பக்களஞ்சியம் என்ற நினைவையும் அடியோடுதுறந்தேன். ‘பேஷ்! நல்ல காரியம் செய்தீர்கள்! நான் ஊரில் இல்லை என்கிற குறையே இல்லாமல் என்னுடைய