பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காள் - 89 வண்டி பனந்தோப்பிற்கு இப்பால் சுமார் பத்துமைல் தூரம் வந்துவிட்டது. அதற்குள்ளிருந்த தடித்த மனிதனுடைய பதைப்பும் ஒருவாறு தணிவடைந்தது. இனி தமக்குப் பயமில்லை என்ற நினைவும் அமைதியும் அவனது மனதில் உண்டானது என்பதை அவனது முகம் தெளிவாகக் காண்பித்தது. அது வரையில் தனது முகத்தை வண்டிக்கு வெளியில் நீட்டிப் பின் புறத்தில் பார்த்தபடி இருந்த அந்த முக்கியஸ்தன் தனது தலையை உள்ளே இழுத்துக் கொண்டவனாய், தனக்கெதிரில் உட்கார்ந்திருந்த கலியாணசுந்தரத்தைப் பார்த்துப் புன்னகை செய்து, ‘ஐயா! இனி பயமில்லை. நாம் வெகுதூரம் வந்து விட்டோம். உம்மை அழைத்து வந்தவர்கள் கோலாப்பூருக்குச் செய்தி சொல்லி அனுப்பியோ, அல்லது நேரில் போயோ, ஆள்களை அழைத்துக்கொண்டு வருவதற்குள் நாம் வெகுதூரம் போய்விடலாம். அவர்கள் இனி நம்மைப் பிடிக்க முடியாது. நம்முடைய குதிரைகள் மூன்று நாள் ஆனாலும் இதே விசையில் போகும். இன்று பொழுது விடிவதற்குள் நாம் இந்தக் கோலாப்பூர் எல்லையைத் தாண்டி செஞ்சி சமஸ்தானத்தின் எல்லைக்குள் போய்விடலாமென்று நான்நம்புகிறேன். உமக்கு அலுப்பாக இருக்கலாம். இது அகாலம் ஆகையால், தூக்கமும் உண்டாகலாம். ஆகையால், நீர் உம்முடைய பக்கத்துப் பலகையில் அப்படியே படுத்துத் தூங்கும், நான் பாதுகாப்பாக விழித்துக்கொண்டு வருகிறேன்’ என்றான்.

அதைக்கேட்ட கலியாணசுந்தரம், ‘ஐயா எனக்கு இப்போது தூக்கம் வரவில்லை. இன்னும் கொஞ்சநேரம் போகப்போக, தூக்கம் தானாக வரும்போது, நீர் சொன்னபடி நான் இப்படியே படுத்துக் கொண்டு துங்குகிறேன். என் மனசு பலவிதமாக உபத்திரவப்பட்டுக் கொண்டிருப்பதால், நான் படுத்துக் கொண்டால் கூட, இப்போது தூக்கம் வராது போலிருக்கிறது. நான் தூங்குவது இருக்கட்டும். வேறொரு முக்கிய விஷயத்தை உம்மிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டுமென்று என் மனம்