பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காலம்

41

திலும், செல்லும்படியான இயந்திரமொன்றைக் கண்டு பிடித்ததாக வந்திருக்கின்றது.

காலத்தில் முன்னும் பின்னும் செல்ல முடியாவிட் டாலும் போகிறது: காலத்தின் ஆதியந்தத்தை அறிய ஒண்ணாதென்றாலும் தொலைகிறது. இந்தக் காலம் நம்மை ஒரு விதத்திலும் தாக்காமல் இருக்குமானால் அதுவே போதும்; ஆனால் அது நம்மைப் படுத்துகிற தொல்லையை நினைத்தால்தான் சங்கடமாய் இருக்கிறது. முகத்தில் சுருக்குவிழச் செய்கிறது; தலையை வெளுக்கச் செய்கிறது; முதுகைக் கோணலாகச் செய்கிறது. அடடா! அது செய்யும் கோலம் ஒன்றா இரண்டா? உலகத்தில் அது செய்த கொடுமைகளை நினைத்தால் இன்னும் பேரச்சமாக இருக்கிறது. "காலமே, நீ எத்தனை நாகரிகங்களை விழுங்கி ஏப்பமிட்டிருக்கிறாய்! மொஹெஞ்சோதாரோ எங்கே? பிரமிட் கோபுரங்களைக் கட்டிய எகிப்து எங்கே? உனது அழிவு வேலை இத்தனை என்றுதான் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா? இல்வளவெல்லாம் செய்துவிட்டாயே, போனது போகட்டும். உனது பழமைத் திரையையாவது கொஞ்சம் அகற்று; எங்களுக்கேற்பட்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் ஐயங்களைப் போக்கிக் கொள்கிறோம் என்றால், அதற்காகிலும் இணங்குகிறாயா? அதுவும் இல்லையே?" என்று சொல்லத்தான் தோன்றுகிறது.

இப்படி நீள நினைந்து பார்க்கிறபோது, இந்தக் காலம் ஆதியந்தமற்ற நிரந்தரமானதென்றே முடிவு கட்ட வேண்டியிருக்கிறது. அப்படியானால் ஆதியந்த மற்ற இறைவனும் காலமும் ஒன்றா? இறைவன் ஆதி யற்றவன்; அந்தமுமற்றவன். காலமும் அப்படித்தான் என்றால் அப்போது காலம் இறைவனுக்கு ஒப்பானதா? சே சே, அப்படியிருக்க முடியாது. இறைவன் காலத்