பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழைக்காலக் காட்சி

49

 ஆதிக்கம் ஓங்குவது போலத் தோன்றியது. மற்ற இடங்களில் ஒரு வகையான மாறுதலுமில்லை, திரையின் பின் புறத்தில் மங்கிய ஒளியைக் கொண்டுசென்றால் முன்புறம் எப்படிச் சற்று ஒளி பெறுமோ அப்படி மென்மையான வெளிச்சம் படர்ந்திருக்கிறது.

மேற்கில் நிமிர்ந்து நிற்கும் மலையுச்சி இதுவரை தெரியவேயில்லை. கீழே நிலப் பசுமை; மேலே புகை மேகக் கூட்டம் இவற்றிற்கிடையே ஓர் ஆழ்ந்த கரு நீலம்-அவ்வளவுதான் மலையின் தோற்றமாக இருந்தது.

இப்பொழுது கொசுத் துளி தூறலாக மாறிவிட்டது. சோளக் கொல்லையில் ஒரே சலசலப்பு.

குறும்பை ஆடுகள் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு மேய விருப்ப மில்லாது நிற்கின்றன. அவற்றின் குட்டிகள் கத்துகின்றன. இடையர்கள் கம்பளியால் உடம்பை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

இரட்டை வால் கரிக்குருவி மட்டும் உற்சாகமாக ஆனைக் கற்றாழையின் உயர்ந்த பூக்கம்பத்திலே அமர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நடப்பதால் உண்டாகும் வெப்பமும் தூறலினால் ஏற்படும் குளிர்ச்சியும் சேர்ந்து எனக்கு ஒர் எழுச்சியைக் கொடுத்தன. மேலும் நடந்துகொண்டே இருந்தேன். திடீரென்று ஓடை வளைந்துவந்து என் முன்பு காட்சி யளிக்கும்; மறுபடியும் வேறு திசையில் ஓடி மறைந்து விடும். அந்த விளையாட்டைக் கண்டு மகிழ்ந்துகெண்டே சென்றேன்.

மழை நின்றுவிட்டது. மேகப் படலம் இடைவெளி விடத் தொடங்கிற்று. மலையின் முடியிலே கட்டித்

பூ. சி.-4