பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கார்த்திகைப் பிறை

69

 கூர்ந்து கவனித்துக்கொண்டே நின்றேன். வெள்ளி மீன் பளிச்சென்று வெளி வந்தது:

நிலா அரசி வருவதற்கு வெள்ளி விளக்கு எடுத்தாய் விட்டது, தனியாகச் சுடர்விடும் அந்த மீனின் உள்ளங்கவர் ஆற்றலில் கட்டுண்டு உலகம் பிறைமகளை எதிர்பார்த்திருக்கின்றது.

அதோ வந்துவிட்டாள் மின்னற் கொடி! மெல்லிய ஒரு பொன் வளைவு!

பிஞ்சு மதியே, நீ இத்தனை அழகுடன் இருந்தால் யார்தாம் உன்னை நெற்றியில் அணிந்து கொள்ள மாட்டார்கள்? சுடலையாடியாகிய அந்தப் பித்தனுக்கும் உன்மீது பித்து ஏற்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லையே!

நீ என்ன உண்மைப் பொருளா? அல்லது அழகுத் தேவதையின் இளஞ்சிரிப்புதான் இவ்வாறு வானில் தோன்றுகின்றதா?

கிழக்கு வானம் நன்கு இருண்டு விட்டது. அங்குக் செவ்வொளி பெற்றிருந்த மேகமெல்லாம் பொறாமை யால் இருண்ட உள்ளம் போல இப்பொழுது களையிழந்து கிடக்கின்றன.

எனது நாட்டம் நிலவின் மென்கீற்றின் மீதே திரும்பியது. பிஞ்சு மதி, பிறைக் கீற்று; இல்லை இல்லை, இனி வரப் போகும் வசந்தத்திற்கு மன்மதன் புதிதாகச் செய்து கொண்ட பொன் வில்.

தொலைவில் தெரியும் மரங்களெல்லாம் கருங்குவியல்கள் போலத் தோன்றுகின்றன. அவைகளெல்லாம் இருளின் படை வீடுகளோ? அங்கிருந்துதான் உல