பக்கம்:பூவும் கனியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



கொண்டே உள்ளனர். பள்ளிக்கூடத்தை விட்ட பிறகும் படிக்கின்றனர். துணிவோடு படித்து அறிவை வளர்க்கின்றனர். நம் நாட்டிலும் அந்நல்ல பழக்கம் வரவேண்டுமென்றால் நம் குழந்தைகளே நல்ல உற்சாகத்தோடு கற்கும்படி செய்யவேண்டும். துணிவு ஊட்டி நல்ல பழக்க வழக்கங்கள், பிறருக்கு உதவும் பழக்க வழக்கங்கள் உண்டாகும்படி செய்யவேண்டும். அப்படிச் செய்வதால் நல்லறிவு பெற்று, நற்செயல் செய்கிற தென்பு பெற்று நன்மக்களாக வளருவார்கள். தமக்கென வாழாதவர்களாக வளருவார்கள்.

புதிய சமுதாயம் உருவாக

நம்முடைய நாட்டிலே புதிய சமுதாயத்தை நாம் உண்டாக்க வேண்டும். இதுவரை எத்தனையோ சண்டை; இன்றுகூடப் பல சண்டைகள் உண்டு. அந்தச் சண்டைகளுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இப்போது, உச்சிக் குடுமி வைத்தவரை எங்காவது ஒருவரைத்தான் பார்க்க முடியும். அநேகமாக எல்லோரும் கிராப் வைத்துக்கொண்டோம். இதற்காகச் சண்டை பிடிக்கவில்லை. சண்டை பிடித்திருந்தால் கிராப் ஆகியிருக்குமா ? சண்டைதான் நடந்து இருக்கும். நமக்குக் கிராப் பிடித்தது. `திட்டுகிற

— 10 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/16&oldid=492895" இலிருந்து மீள்விக்கப்பட்டது