பக்கம்:பூவும் கனியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்கால மன்னர்கள்



வர்கள் திட்டிக்கொண்டே இருக்கட்டும் என உடனே சென்று கிராப் வைத்துக்கொண்டோம். இதைப்போலத்தான் வேண்டாத பழைய வழக்கங்களும் எப்படியோ தொலையட்டும். அதற்காகச் சண்டை போடக் கூடாது. அவர்கள் அறிவற்றவர்கள் என்று சொல்லக் கூடாது. அவர்கட்கு ஒன்றும் தெரியாது என எண்ணக்கூடாது. சண்டையிலே காலம் கழியக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் வீடும், ஊரும் நன்றாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். 'இவன் இன்னான், நான் இன்னான்' என்று சொல்லாமல் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலை வரப் பாடுபடுவோம். நாம் எல்லாம் இந்நாட்டு மன்னர்தாம். குடிசையிலே இருந்தாலும் மாட மாளிகையிலே இருந்தாலும் எல்லோரும் மன்னர்கள்தாம்.

இந்த நிலைமையை நினைவுபடுத்திக்கொண்டு, நமக்குள் வேறு எவ்விதமான வேற்றுமை இருந்தாலும், அவற்றைத் தனிப்பட்ட காரியமென விட்டு விட்டு நாட்டுக் காரியத்துக்காக, பொதுச் செயல்களுக்காக நல்ல குழந்தைகள் வளரவேண்டும் எனப்பாடுபட வேண்டும். உங்களுக்குத் தனிப்பட்ட கொள்கை வேற்றுமைகள் இருக்கலாம். அவை பள்ளிக்கூடத்திற்கு வெளியே. பள்ளிக்கு உள்ளே அவற்றிற்கு இடமில்லை. அங்கே படிப்புச்சொல்லிக் கொடுக்க வேண்டும். உற்சாகமாகச் சொல்லிக்

— 11 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/17&oldid=492896" இலிருந்து மீள்விக்கப்பட்டது