பக்கம்:பூவும் கனியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்கால மன்னர்கள்



II
இளைஞர்களுக்கு அறிவுரை
------------

மாணவ மாணவியர்களே !

உங்கள் பருவம் மீண்டும் கிடைக்காத பருவம்; பொன்போற் போற்றிப் பயன்படுத்தப்பட வேண்டிய பருவம். வாய்ப்போ கிடைத்தற்கரிய வாய்ப்பு. தொடக்கப் பள்ளிக்கூடங்களே இல்லாத ஆயிரக் கணக்கான சிற்றூர்களும், படிக்க வாய்ப்பில்லாத பல இலட்சம் மக்களும் உள்ள இந்நாட்டில், உங்களுக்காவது ஏதோ படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறதென்றால், அதை எளிதானதாகவோ அலட்சியப்படுத்தக் கூடியதாகவோ கருதாதீர்கள்; இப்பருவத்

— 13 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/19&oldid=492899" இலிருந்து மீள்விக்கப்பட்டது