பக்கம்:பூவும் கனியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



தையும், வாய்ப்பையும் நன்றாக முழுதும் பயன் படுத்திக்கொள்ளுங்கள்; மாணவப் பருவத்தில் கற்க வேண்டுவன வெல்லாம்'கற்றுக்கொள்ளுங்கள்; பெற வேண்டிய திறமைகளை யெல்லாம் பெற்றுக்கொள்ளுங்கள், தேடிக்கொள்ள வேண்டுவன வெல்லாம் தேடிக்கொள்ளுங்கள்.

கல்வி கரையற்றது

கற்க வேண்டுபவை உங்கள் பாட நூல்களோடு முடிந்துவிட்டனவாக எண்ணாதீர்கள். கற்கவேண்டு பவைகளை அறிமுகப்படுத்துபவைகளே அவை. பாட நூல்களுக்கு அப்பால் - பரீட்சைகளுக்குத் தொடர்பில்லாத-பலவற்றை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; படிப்பை முடித்தபின், அவைகளைக் கற்கலாம் என்றுமட்டும் காலங் தாழ்த்தாதீர்கள்.

வெறும் ஏட்டுப் படிப்பு தகவல்களைத்தான் கொடுக்கும்; அறிவொளியைத்தான் வீசும். அவற்றை வாழ்க்கையோடு இணைத்துப் பயன் பெறும் திறமையை நீங்கள் பெற முயலவேண்டும். வாழ்க்கைக்கு ஊக்கம், உறுதி, உழைப்பு, தன்னம்பிக்கை இன்றியமையாதவை. அவற்றை யெல்லாம் நீங்கள் இடை விடாத பயிற்சியாற் பெறலாம்; அப்படிப் பெறத் தவறவேண்டா.

பிஞ்சிற் பழுக்கவேண்டா

இளம்பருவத்தே உங்களை மயக்கக் கூடியவை பற்பல.

— 14 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/20&oldid=492900" இலிருந்து மீள்விக்கப்பட்டது