பக்கம்:பூவும் கனியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



ஒவ்வோர் உருவில் இருக்கிறது' என்கிற முடக்கு வாதம் நம்மை முன்னேறவொட்டாமல் தடுக்கும். அவ்வாதத்திற்குச் செவி கொடுத்தால் நீங்கள் மககள் தன்மையை எட்ட முடியாது.

'எல்லோரும் ஒர் குலம்

எல்லோரும் ஓர் இனம்'
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'

என்ற நல்லுரைகளை நாம் பல்லாண்டுகளாகப் பலப்பல மேடைகளிலும் கேட்டுத்தான் வருகிறோம், இவற்றைத் தமிழனின் உயர்விற்கு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். ஆனால் நாம் உண்மையிலே சாதிகளை விட்டு மக்களாகும் வழியில் நடக்கிறோமா? தேர்தல்களில் ஆதரவு தேடும் முறையைக் கவனித்தாலே போதுமே, நம்மை விட்டுச் சாதி வெறி போகவில்லை என்பதற்கு. காரணம் என்ன? சாதிகளை வைத்துக்கொண்டே பேச்சளவில் சாதிப்பற்று வேண்டாமென்று கூறி, வெறும் பொழுதுபோக்காக வேலை செய்துகொண்டிருக்கிறோம். எனவே, இடமும் காலமும் கிடைத்தபோது சாதிவெறி முழு ஆட்டம் ஆடுகிறது. மக்கட் பண்பை மறைக்கும் சாதிப்பற்று ஒழியவேண்டு மென்றால், சாதிகள் இல்லாத நிலை ஏற்படவேண்டாமா? அதற்கான வழியை இனித்தான அறிந்துகொள்ளப் போகிறீர்கள்? அந்நிலை வெறும் விறுவிறுப்பான பேச்சால்

— 22 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/28&oldid=492926" இலிருந்து மீள்விக்கப்பட்டது