பக்கம்:பூவும் கனியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளைஞர்களுக்கு அறிவுரை



மட்டும் கிட்டுமா? கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றிவிட்டு நாட்டத்திற் கொள்ளாவிட்டால் ஏற்படுமா ? நெஞ்சில் உரத்தோடு, நேர்மைத் திறனேடு எல்லாச் செயல்களிலும் சாதியை நீக்கினால் அன்றோ முடியும்? அந்த நேர்மையும் உரமும் உங்களிடம் எதிர்பார்ப்பது அதிகமா?

சமய வெறி

சமயப் பற்றும் சமய வெறியாக மாறி அடிக்கடி நம்மை அலைக்கழிக்கிறது. சமயம் மனிதனுடைய தனி கூட்டு வெளிச்சத்திற்காக அதைப் பொது விவகாரமாக்கி, பகையை வளர்க்கும் வெறியாக மாற்றுவது ந ல் ல த ன் று. சமயம் மக்களை ஒழுங்குபடுத்திப் பண்படுத்தாமல் சண்டையை வளர்ப்பதா? சமயத்தின் மதிப்பு அதைப் பின்பற்றுபவர்களின் கோலத்தில் இல்லை; சீலத்தில் இருக்கிறது என்பதை நினைந்து, அதற்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள்.

முடிவுரை

உருவால் மக்களாய்ப் பிறந்த நாம், நிலையால் மக்க ளாகாமல் இருப்பதற்கான காரணங்கள் சிலவற்றை உங்களிடம் காட்டினேன். அவற்றைச் சிந்தித்துப் பார்ப்பீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதன். விளைவாக உங்களுக்குத் தெளிவு

— 23 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/29&oldid=492927" இலிருந்து மீள்விக்கப்பட்டது