பக்கம்:பூவும் கனியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



அறிக்கை வாசிக்கக் கேட்டேன்; நீங்களும் கேட்டீர்கள். சென்ற ஆண்டு இக் கல்லூரி நல்ல பணி ஆற்றி இருக்கிறது என்று கண்டோம்.

பாரதியார் கனவு நனவாயிற்று

அறிக்கை படிக்கக் கேட்பதற்கு முன்பே உங்கள் இராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டேன்; பூரித்துப்போனேன்.

'ஒளி படைத்த கண்ணிணாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா'

என்று பாரதி, அவர்கள் இல்லாத இடத்திலே பாடினார். இன்றிருந்தால் ஒளிபடைத்த கண்ணினராய், ஏறு நடையினராய் இன்று இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று அவர் பூரித்துப்போவார் அவர் கண்ட கனவு இன்று நனவானது கண்டு நானும் பூரித்துப்போனேன். மிக நல்ல நடை நடந்தீர்கள்; பெருமிதத்தோடு நடந்தீர்கள். இரண்டாண்டுகளாகத்தான் இப்படை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இரண்டாண்டுகளில் நல்ல நடை நடக்கப் பயிற்சி கொடுத்த உங்கள் ஆசிரியர்கட்கும் உங்களுக்கும் என் வணக்கம்.

வெற்றிக்குத் தடை - அசட்டுத் துணிவு

அறிக்கையைப் படித்தேன். சாதாரணமாக அறிக்கையில் எதிர்பார்ப்பது எது? தேர்ச்சியைப்

— 26 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/32&oldid=492933" இலிருந்து மீள்விக்கப்பட்டது