பக்கம்:பூவும் கனியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் நிலையும் வழியும்



பற்றி. தேர்ச்சியில் நீங்கள் பின்னடைய வில்லை. நிறைய-கிட்டத் தட்ட 70 சதவிகிதத்திற்கு மேலும்-தேறியிருக்கிறீர்கள். பிரிவு பிரிவாகப் பார்த்தால் 98 சதவிகிதத்திற்குக்கூடப் போயிருக்கிறீர்கள். ஆனாலும் அதனோடு மன நிறைவு கொள்ளக்கூடாது. ஏன் அப்படிச் சொல்கிறேன்? என்னுடைய நோக்கம் என்னுடைய எண்ணம்-என்னுடைய ஆழ்ந்த முடிவு எல்லோரும், 100-க்கு 100 பேரும், தேறவேண்டும் என்பது. உங்கள் கல்லூரித் தலைவர் அவர்கள் ஆற்றல் மிக்க தலைவர்; எடுத்த காரியத்தை மிகத் திறமையாகச் செய்யக்கூடிய தலைவர் என்று எனக்குத் தெரியும். உங்கள் ஆசிரியர்களைப் பார்க்கிறேன். அவர்கள் இளைஞர்கள். எனக்கு இளைஞர்களிடத்திலே நம்பிக்கை யுண்டு. அப்படிப்பட்ட இளைஞர்களைக் கொண்டுள்ள கல்லூரி நல்ல பணியாற்றும். இதில் ஐயமில்லை. ஆயினும் இன்னும் 80 சதவிகிதம் தவறியிருக்கிறீர்கள் என்றால், அதில் ஆசிரியர்கள் தவறு இல்லை; வசதியில் தவறில்லை; கொஞ்சம் எங்கோ அலட்சியம் இருந்திருக்கிறது. உங்கள் தலைவர் சற்றே சாடை காட்டினார். குறிப்புக்கூடக் காட்டினார், வேறு இடத்திலே. எங்கே? “கால்பந்துப் போட்டியிலே மூன்று ஆண்டுகள் வெற்றி பெற்று நிரந்தரமாக அந்தப் பரிசைப் பெற்றுவிட்டோம்; இவ்வாண்டில் பெறவில்லை; கண்ணேறு பட்டுவிட்டது" என்றார். இல்லை இல்லை; கண்ணேறு பட

— 27 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/33&oldid=492935" இலிருந்து மீள்விக்கப்பட்டது