பக்கம்:பூவும் கனியும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



வில்லை. நமக்குக் கொஞ்சம் அலட்சியம் வந்துவிட்டது. வெற்றி என்பது விரும்பத் தக்கதுதான். அதே நேரத்திலே கொஞ்சம் அதற்கு முக்கணாங் கயிறு போடவேண்டும். ஒரு எழுத்துத் தவறிவிட்டால் வேறுவிதமாக மாறிவிடும். வெற்றி வெறியாக மாறி விடும். நம்மைவிடத் திறமை உடையார் யார் இருககிறார்’ என்ற நினைப்பு அரும்பிவிட்டால் எவ்வளவு பெரிய அறிஞனும் சறுக்கி விழுந்துவிடுவான். அப்படித்தான் அந்தக் கோப்பையை இழந்திருக்கிறீர்கள். கண்ணேறு பட்டு அன்று. அதே போன்று நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்; வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுகிறோம்; நமக்கு என்ன குறை: என்று இருந்திருப்பீர்கள். அப்படி எண்ணியவர்களே தவறியிருக்கிறார்கள்.

100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்கித் தேற வேண்டும் என்று சொல்வோரில்லை; 100-க்கு 60 மதிப் பெண்கள் வாங்கித் தேறவேண்டும் என்று சொல்வோர்களுமில்லை. 100-க்கு 40,35 வாங்கினாலே மேல் வகுப்புக்குப் போகமுடியும் என்று வைத்திருக்கிறார்கள். அதுகூட வாங்க முடியாத மாணவர்கள் உங்களிலே இருக்கிறீர்களா? நீங்கள் அப்படி நம்பினால் அதை இன்றோடு மறந்துவிடுங்கள். நீங்கள் எல்லோரும் தேற முடியும். எப்போது முடியும்? உங்களிடம் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். நாம் தவறுவதற்காகப் பள்ளிக்கு வரவில்லை, கல்லூரிக்கு

— 28 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/34&oldid=492946" இலிருந்து மீள்விக்கப்பட்டது