பக்கம்:பூவும் கனியும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் நிலையும் வழியும்



வரவில்லை. பல்கலைக் கழகத் தேர்வில் வடிகட்டித் தான ஆகவேண்டும் என்பதற்காகத் தேர்வு நடத்துவதில்லை. நீங்கள் வடிகட்டும்படி விட்டுவிடுகிறீர்கள்; அலட்சியம் செய்து ஏமாந்துவிடுகிறீர்கள்.

ஆகவே, நீங்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்யவேண்டும். அசட்டுத் துணிவு வாழ்க்கைக்குப் பயன்படாது. நல்ல கவனம் செலுத்தி முயற்சியை மேற்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் முயற்சி வேண்டுமோ அந்த நேரத்தில் முயலவேண்டும். இதைத்தான் வள்ளுவர்

ஞாலம் கருதினும்
    கை கூடும் காலம்
கருதி இடத்தாற்
    செயின்

என்று கூறுகிறார். ஆகவே நூற்றுக்கு நூறுபேர் தேர்வதில் எப்படித் தவறு ஆகமுடியும்? காலத்தாலே செய்ய வேண்டும். இடம் கருதிச் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் படித்துப் படித்து இரண்டொரு ஆண்டுகளுக்குள் எல்லோரும் தேறும் நிலை வர வேண்டும். தேற வேண்டும் என்பது என் அவா.

அந்த இரண்டாண்டிலே இன்னொன்றும் ஆகி விடவேண்டும். என்ன? இது அன்று இரண்டாந்தரக் கல்லூரியாக இருக்கக்கூடாது. முதல்தரக் கல்லூரி

— 29 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/35&oldid=493094" இலிருந்து மீள்விக்கப்பட்டது