பக்கம்:பூவும் கனியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



யாக பட்டப் படிப்புக்கு ஆயத்தம் செய்யும் கல்லூரியாக இருக்கவேண்டும். இந்த அறநிலையத்தார் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. பல அறநிலையங்களை நடத்துகிறார்கள், வளர்ந்துகொண்டே வருகின்றன. ஆகவே இன்னொரு படி வளர்வது முடியாத அன்று. எனவே அப்படி வளர்ந்து முதல்தரக் கல்லூரியாக-நிலையிலேமட்டு மல்லாமல் தகுதியிலேகூட நூற்றுக்கு நூறு மாணவர்கள் தேறுகிறார்கள் என்ற உயர்நிலையுடைய சிறந்த கல்லூரியாக இருக்க வேண்டும்.

போட்டியும் துணிச்சலும் வேண்டும்

விளையாட்டிலும் நீங்கள் புலிகளாக இருக்கிறீர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்றீர்கள். சில போட்டிகளில் தவறிவிட்டீர்கள். தவறியதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. நான் போட்டிகளியே வெற்றி பெறாதவன். ஆனால் வருத்தப்படாமல் இருக்கவும் கற்றுக்கொண்டவன். மேலும், ஓர் இளைஞன், முதல் தமிழன், தமிழ் நாட்டிலே கல்வித்துறை தலைவனாக இளம்வயதிலே வந்துவிட்டானே' என்று பலர் வியப்படைகிறார்கள். பலர் பலவித மாகக் கூறுவார்கள். காரணம் ஒன்று சொல்வேன். துணிச்சல் வேண்டும். பெரிய நிலைக்கு வர யார் முயற்சி செய்தாலும் துணிச்சல் வரவேண்டும். ஆகவே போட்டிகள் பலவற்றிலும் கலந்துகொள்ள

— 30 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/36&oldid=492949" இலிருந்து மீள்விக்கப்பட்டது