பக்கம்:பூவும் கனியும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் நிலையும் வழியும்



வேண்டும். தோற்றுவிடுவோமோ, வெற்றி பெறாவிடின் ஊரார் கிண்டல் செய்வார்களோ, ஏளனம் செய்வார்களோ என்று அச்சப் பட் டு க் கலந்து கொள்ளாமல் பின்னடைந்து போகிற மக்கள் என்றும் முன்னேற முடியாது. `வெற்றியோ தோல்வியோ நமக்குக் கவலை இல்லை. முயற்சிக்குத்தான் நாம் பொறுப்பாளர். பலனு க்கு நாம் பொறுப்பாளர் அல்லர்’ என உழைக்க வேண்டும் போட்டியில் ஈடுபடுகிறவர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வி யடைந்தாலும் அந்தப் பயிற்சி காரணமாகப் பின்னர் வெற்றியே பெறுவர். எ ன க் குக் காத்திருந்தது போன்ற வெற்றிகள் பல உங்களுக்கும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே, அந்த வெற்றிகளை அடைய உங்களே ஆயத்த மாக்கிக்கொள்ளுங்கள். தவறிவிடுவோமோ என்று அச்சப்படாமல் ஊக்கத் தோடு நல்ல பெயர் எடுங்கள்..

கல்வியின் முடிந்த பயன் - மனிதப் பண்பு


அறிவு பெறுகிறீர்கள், நல்ல ஆற்றல் பெறுகிறீர்கள். போதுமா? கல்வி என்பது அறிவைமட்டும் 'வளர்ப்பது அன்று; ஆற்றலைமட்டும் வளர்ப்பது அன்று; கல்வி மனிதனிடத்திலே மற்றொன்றையும் வளர்க்கவேண்டும். அது மிகச் சிறப்பான ஒன்று. சிறப்பான ஒன்று என்னும்போது நமக்கு - ஆறாவது அறிவு-பகுத்தறிவு நினைவுக்கு வருகிறது. ஆம், அத

— 31 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/37&oldid=493095" இலிருந்து மீள்விக்கப்பட்டது