பக்கம்:பூவும் கனியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



னையும் வளர்க்கவேண்டும். நமது சிந்தனை-ஆறாவது அறிவு-வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும் யாரோ சொன்னார்கள் என்பதற்காக எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சிறப்பான ஒன்று என்று நான் குறிப்பிடுவது அந்த ஆறாவது அறிவை மட்டுமன்று. அதைவிடச் சிறந்தது ஒன்று இருக்கிறது. அதுதான் மனிதனை மனிதன் என்ற பெயருக்கு உரியவனாக ஆக்குகின்றது. அஃது எது? அதைத்தான் மனம் என்று சொல்வார்கள்- ஆத்மா என்று சொல்வார்கள் - உள்ளம் என்று சொல்வார்கள். அந்த உள்ளத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம். கல்வியின் நோக்கம் உள்ளத்தை உருவாக்குவது; மனத்தைச் செம்மைப்படுத்துவது; சீலத்தைக் கொடுப்பது; சான்றாண்மையைத் தருவது. சான்றோன் ஆக்குவதே கல்வியின் குறிக்கோள். சான்றாண்மை இல்லாத கல்வி பயனற்ற கல்வி; கேடான கல்வி. இந்தக் கல்லூரியிலே அந்தச் சான்றாண்மையை ஆக்கும் நல்ல செயல்களும், நிகழ்ச்சிகளும் நடந்து வருவதனை அறிய மகிழ்கின்றேன்; பாராட்டுகின்றேன்.

நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் ஆன உதவியை மற்றவருக்குச் செய்யவேண்டும். `யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று எண்ணி நம்மால் ஆன தொண்டினை ஆற்றவேண்டும். ஆகவே உங்களுக்காகமட்டும் நீங்கள் அறிவு பெறாமல்,

— 32 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/38&oldid=492950" இலிருந்து மீள்விக்கப்பட்டது