பக்கம்:பூவும் கனியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் நிலையும் வழியும்



ஆற்றல் பெறாமல், மற்றவர்க்குத் தொண்டு செய்ய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் நல்ல மனிதத் தன்மை அந்த மனிதத் தன்மை உங்களோடு மட்டும் இருக்கக்கூடாது. அது நாளும் பலரிடம் பரவும்படியாகச் செய்யவேண்டும்.

மாநிலம் பயனுற வாழ்வதற்கே சுடர்மிகும் அறிவு

இந்த நேரத்திலே பாரதி பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர் கேட்கிறார்; என்ன என்று கேட்கிறார் ?


'தேடிச் சோறு நிதம்தின்று
சின்னம் சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பம் மிக உழன்று
பிறர்வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின்மாயும்-பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வேன் என்று நினைத் தாயோ?'


என்று கேட்கிறார். அந்தப் பாடலை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்தப் பாடலைப்பற்றி இதுவரை சிந்தி க்காமல் இருந்தால் இப்போது சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வேடிக்கை மனிதரல்லர்; இந்நாட்டு மன்னர்மட்டு மல்லர், எதிர் காலத்திலே உலக மன்னராகப் போகிறீர்கள்! ஆகவே அந்த நிலைக்கு உங்களை ஆயத்தம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த

— 33 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/39&oldid=492957" இலிருந்து மீள்விக்கப்பட்டது