பக்கம்:பூவும் கனியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



நிலைக்கு இன்றுமுதல் ஆயத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். இந்த நாட்டின் மன்னர்களாக இருக்க உலகத்தின் குடியாக இருக்க-உலகத்துக்கு வழி காட்டக்கூடிய உத்தமர்களாய், அறிவாளிகளாய், திறமைசாலிகளாய் வாழக்கூடிய நிலைக்கு உங்களை ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்ல ஆசைப்படுகிறேன். அதே பாரதியார்,

நல்லதோர் விணைசெய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி எனைச் -
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி ! நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?'

என்று கேட்கிறார். வீணை; நல்ல வீணை. எல்லோரும் செய்யக்கூடிய வீணையன்று; பெரு முயற்சியோடு, பெரும் ஆய்வோடு செய்யப்படுகிற வீணே. அப்படிப்பட்ட வீணை செய்தபிறகு அதை நலங்கெட வீணாக எறிந்துவிடுவார்களா? புழுதியிலே எறிந்து விடுவார்களா? எறிந்துவிட மாட்டார்கள். அதைப் பயன்படுத்துவார்கள். யாருக்குப் பயன் வீணையை மீட்டுகிறவருக்கு மாத்திரம் மகிழ்ச்சியா? கேட்கிறவர் களுக்கெல்லாம் மகிழ்ச்சியை அந்த வீணை கொடுக்கிறது. முயற்சியை மேற்கொள்கிறார் வீணையைச் செய்தவர்; நல்ல வீணையை வாங்கியவரும் முயற்சியை

— 34 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/40&oldid=492958" இலிருந்து மீள்விக்கப்பட்டது