பக்கம்:பூ மணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{32 இவற்றையெல்லாம் பூமா கண்ணுேட்டமிடும் தருணம் அவளுக்கு உள்ளத்திலே ஆசை இராது ; அழுகைதான் மண்டி நிற்கும். ஆதங்கமிராது ; ஆத்திரம்தான் அணேத்து நிற்கும். ‘பூமா-இந்த இரண்டே இரண்டு வார்த்தைகளே அடுக்கி அவளே அவள் கணவன் கூப்பிட்டு எத்தனை நாட் களாகிவிட்டன : ராஜேந்திரன் கணக்கெடுத்துப் பார்த் திருப்பானு ? ஆல்ை பூமா பார்த்தாள். பார்த்து என்ன செய்வது ? அவர்களது வாழ்க்கை நிலவிலே ஏனே இந்த மாற்றக் கிரகணம் கறையாக அமைந்ததோ ? கறை ஆம் கறை : கிரகணம் 1 ஆம் ; கிரகணம் ! நிலா சிரித்துக்கொண்டிருந்தது. பூமா தலையை நிமிர்த்திப் பார்த்தாள். இயற்கை அழகுடன் இருந்தது. நிலவை ரசிக்கும் நிலேயிலா இருந் தாள் அவள் ? ஆனல் அன்று...? பூமா மிஸஸ். ராஜேந்திரன் ஆன அன்றைக்கு அவள் எவ்வளவு மனக்கோட்டைகள் நிர்மானித்திருந்தாள் ? அன்றும் இதேபோலத்தான் நிலவு போதைப் பொருள் களான நிலவு இருந்தது, மங்கையும் இருந்தாள். பூமாவின் புன்னகையில், பஞ்சனேயில் தூவப்பட்டிருந்த நறுமல ரிதழ்களின் சுகந்தத்தில், பூக்கோலமிட்டுச் சென்ற பால் ஒளியில் தன்னை மறந்திருந்த்ான் ராஜேந்திரன். தான் ஒப்புவிக்கப்பட்டிருக்கும் கணவன் கண் நிறைந்திருப்ப்தை அறிந்து கொண்டதும், பூமா பூரித்துப் போள்ை. ஆக நேசம்-காதல் அவர்களே அன்புக் கயிற்றினுல் இறுகப் பிணத்தது. புத்தம் புது முறையில் இரண்டு பேரும் வாழ்க்கைத் தோணியைக் கடக்கவிடவேண்டும். தன்னைப் பரிபூரண மாக அறிந்துகொள்ளப் பூமாவுக்கு-தன் உயிர்த்துணைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/108&oldid=835326" இலிருந்து மீள்விக்கப்பட்டது