பக்கம்:பூ மணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {}4 போகும். துன்பத்தில் இன்பம் காணவிருக்கும் பொன்னை தொரு சுபவேண்?யை ஆவலுடன் எதிர்நோக்கிய வண்ணம் பூமாவின் தாய் உள்ளம் தண்மை பெற்றது. அன்று. பூமாவுக்கு மனம் நிம்மதி இழந்துபோயிருந்கது. விஜயா வந்தாள். ரேடியோவைத் திருப்பினள். மன விளக்கு என்ற நாடகம் ஒலி பரப்பப்பட்டது. ஏறக்குறைய அது தன் நிலேயை ஒத்திருப்பதைப் போலவே பூமா உணர்ந்தாள். கட்டிய மனயாளைக் கொண்ட கணவன் பிளவுகாட்டி வெறுக்கிருன் கதையில். எ.ரோஜாவாக மலர்ந்தும் மதிப்பில்லே யென்ருல், முள்ளாகச் சுருக்கென்று தைத்துவிட வேண்டுமென்பது தான் என் கொள்கை...? நாடகத்தில் தோழி ஒருத்தியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பூமா ஏனே நில்ை குலேந்தாள். எநல்ல பெண் இவள் பெண் அல்ல ; பேய் ! கொண்டவர் மனம் வேறுபட்டால் அதற்காக அவரை வெறுக்குமாறு உபதேசம் கூறும் இவளேப் பேய் என்று சொல்லாமல் வேறெப்படி அழைக்க முடியும்?...” என்ருள் பூமா விஜயாவிடம். ஒன்றும் புரியாதவள்போல பூமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் விஜயா. கடைசியில் கதை சுபமாகவே முடிகிறது. கணவன் மனைவியர் ஒன்ருகின்றனர். ‘அதைப்போல தன் வாழ்வும் ஒளி பெறுமா? புத்துயிர் பெறுமா ?- என்று நினைப்பதைப் போல அவள் பெருமூச்செறிந்தாள். பூமா, அன்றைக்குத் தன் கணவனே இன்னும் காணுேமே என்று ஏங்கிக் கொண்டிருந்தாள். அப்பொழுது வாசலில் கார் வந்து நிற்கும் அரவம் கேட்டது. சொல்லி - வைத்தாற்போல ராஜேந்திரன் வந்துகொண்டிருந்தான். அவனுடன்கூட ஓர் அழகியும்வந்தாள். ×.*・

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/110&oldid=835330" இலிருந்து மீள்விக்கப்பட்டது