பக்கம்:பூ மணம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 6 களுடன் நான் படம் பார்க்கச்சென்றதுதான அவர் என்மீது: கண்ட குறை? வாய் திறந்து என்னே ஒரு வார்த்தை கேட் டிருக்கலாமே. அன்றுதான் என்னே எட்டி உதைத்தாரே. என் இன்பக் கனவைக்கூடச் சட்டைசெய்யவில்லேயே அவர். அதைக்கூடப் பொறுத்திருந்தேன். நான் தாய் ஆகி வருவது அவருக்குத் தெரியுமல்லவா ? தெரிந்தும் கூடவா இப்படி நடந்துகொண்டார்...? கடிகாரத்தின் பெண்டுலம்போலப் பூமாவின் பூமனம் முன்னும் பின்னும் அசைந்தாடியது, அவள் மனச்சாட் சிக்கு உகந்தவாறு. சோகமே உருவாக அமைந்த அவள் முகம் பேயறைந்த மாதிரி வெளிறியது. சுடுகாட்டு அமைதி, தனிமை அவளேக் கொன்றது. விஜயாகூட இல்லே. அவள் தன் அத்தானுடன் ஊருக்குப் போய்விட்டாள் ; அண்மையில் அவள் விஜயா குமாராகி விடுவாள்! ஒன்றும் தோன்ற வில்லே பூமாவுக்கு. மறுகணம் என் னவோ தோன்றவே நடுக்கத்துடன் தன் துணேவரின் அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு முகமன் கூறியது. ராஜேந்திரனின் புன்னகை தவழ் வதனம். அண்டினுள் ; அந்தக் கொள்னேச் சிரிப்பிலே எவ்வளவு காந்தமயக்கம் இழைகின்றது : அந்தப் பார்வையில்தான் எத்தனே ஆதரவும் அருளும் படர்ந்திருக்கிறது பட்டமளிப்பு விழாவின் சமயம் எடுத்த படம் அது. அவள் கண்களில் கண்ணிர் இருந்தது. மேஜைமீதிருந்த புகைப்படம் ஒன்று அவள் கண் துக்குத் தட்டுப்பட்டது. தனதாக இருக்குமென்று ஆவ லுடன் அவள் கண்கள் படத்தைப் பார்த்தன. ஒருகணம் அவள் அதிர்ச்சியடைந்தாள். அது அவள் படமில்லை! மேல்லிகா ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/122&oldid=835355" இலிருந்து மீள்விக்கப்பட்டது