பக்கம்:பூ மணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 7 அவள் அதரங்களின் கூட்டுறவில் மேல்லிகா என்ற பெயர் வெடித்துக் கிளம்பியது. அப்படத்தின் கீழிருந்தது. அந்தப் பெயர்! மல்லிகாவின் எழில் உருவம் அவள் நெஞ்சில் பதிந்தது. பெயரின் அடியிலிருந்த இதயராணி என்ற சொல் அவளேச் சாறு பிழிந்தது. 'இவள்தான் என் கணவரின் மனதை மாற்றிவிட்ட கள்ளியோ ? இவள் அழகுக்கு அடிபணிந்துதான என்னே அவர் இப்படிப் புறக்கணித்து விட்டார் ? ஆம்; அவர் மல்லிகாவின் வீட்டில்தான் சரணடைந்திருக்க வேண்டும். அப்படியென்ருல் யார் இந்த மல்லிகா ? எங்கு இருக் கிருள்?-பூமாவின் கற்பனே ஒட்டம் இது. அந்தப் படத்தைத் துார எறிந்து விட்டுப் படுக்கையில் விழுந்து அழுதாள். - அன்று-அதாவது பூமா ராஜேந்திரனின் சொத்தாகி விட்டதிலிருந்து அவளுக்கு வாழ்வே ஒரு எழிற்கனவாகத் தெரிந்தது. ஆனல் இன்றைக்கு அதே வாழ்வு அவளுக்கு ஒரு பகற்கனவாகி விட்டது. நீர் இறுதியில் கானல் ஆனது போலவோ...? பூமா, மனிதன் என்றிருந்தால் அவனுக்கு ஒர் இதயம்தான் உண்டு. அதை ஒருத்திக்குக் கொடுத்து விட்டால், அப்புறம் அதை வேறு எவளுமே அடைய முடியாது.’’ Y. அன்று முதல் இரவில் தன்னிடம் தன் கணவன் கூறிய அவ்வார்த்தைகள் இன்று கூறுவதுபோல் விழுந்தன பூமாவின் காதுகளில், அவள் மூளையில் சத்து இருந்தது. ‘. . . . ஆம் அவருக்கு இருக்கும் அந்த ஓர் இதயத்தையும் என்றைக்கு மல்லிகாவுக்குக் கொடுத்தாரோ? அவள் ஆண்ட நெஞ்சிலே நான் எப்படி இடம் பெற நினைக்க 8 سنويا

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/123&oldid=835357" இலிருந்து மீள்விக்கப்பட்டது