பக்கம்:பூ மணம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 9 முடிவு இப்படி அவளுக்குச் சாட்சியளித்து நின்றது. பெண் உள்ளம் பேதலித்தது; கணவன் தன்னை மதியாமல் புறக்கணித்துவிட்டுச் சென்றதை எண்ணிப் பார்த்த ஆமாவுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு வலுவுற்றது. தலவிரி கோலமாகப் பைத்தியம் பிடித்தவளாக ஓடிவந் தாள். அலமாரியைத் திறந்தாள். விஷம்! சீசாவில் ஒட்டியிருந்த சிவப்பு எழுத்துக்களே அவள் விரல்கள் தடவின; அவள் பார்வை தடுமாறியது. நடுங்கும் கைகளுடன் சீசாவை எடுத்துக் கொண்டாள். இதில் ஒரு சொட்டை உட்கொண்டு விட்டால் 12இந்த நினேவுக்கதிர் அவளுக்கு ஆறுதல் தந்தது. விரக்தியுற்ற அவளுக்குச் சாவு ஒன்றுதான் மருந்தாகப் பட்டது போலும்!... கணத்தில், சீசாவை வாயருகே கொண்டு சென்ருள். அதே கணம் பூமா நடுங்கிப் போனுள். கை, கால், உடல் எங்கும் நடுக்கம் ஏற்பட்டது. சீசாவைப் படாரென்து நழுவ விட்டாள். அப்போதுதான் அவளுக்குச் செய்யவிருந்த மன்னிக்கமுடியாத பாவம் புலயிைற்று. வயிற்றில் வளர்ந்து வரும் இரண்டில் ஒன்றன. ஒரு புது ஜீவனேப்பற்றிய ஞாபகம் அவளுக்கு மனசில் பாலே வார்த்தது. சாவின் வாயிலிருந்து தப்பிய அவள், தன் குழந்தையையும் காப்பாற்றிவிட்ட புண்ணியத்தையும் சம்பாதித்துக் கொண்டாள். அப்போது அவளுக்கு, வளரும் குழந்தை வாழும் தெய்வமாகத் தோன்றிற்று. அவள் பெருமூச்செறிந்தாள். அதில் அமைதி கனிந்தது. மாலேயில் தன் கணவனுக்கு வந்திருந்த தபால் திணைவு அப்போதுதான் வந்தது. அவள் அதைப் பார்த்தாள். அது திருமண அழைப்பிதழ். உள்ளே காணப்பட்ட தம்பதி களாகப் போகும் இணைப்பின் இரு உருவங்களைப் பார்வை விட்டாள். மணப்பெண்ணேப் பார்த்ததும் அவளுக்கு எங்கோ பார்த்த முகமாகத் தோன்றியது. அன்று காப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/125&oldid=835361" இலிருந்து மீள்விக்கப்பட்டது