பக்கம்:பூ மணம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினுறு : கன்னித்தாய் மேரி வாலேக் குமரிபோன்ற எழில்மிக்க பூங்கொடி பருவச் சுழற்சியில் பூத்துப் புன்னகை புரிய வேண்டியதொன்று. காலச் சுழற்சி வினோதமானது கொடி பாவம், காய்ந்து விடுகிறது. அதற்குப் பின்னிப் படரக் கொழுகொம்பு ஒன்று உண்டு. அது சுழலில் ஒடிந்து விழுந்துவிட்டது. கொடி எங்ங்ணம் பிறகு தாவிப் படரமுடியும் ? பூங்கொடி. ஆம்; பின் அதற்கு வளமேது வனப்பேது ? வாழ்வு தான் வகைப்படுமா ? و و 9پثهgr ع نه இது மல்லிகாவின் புதிர்க்கேள்வி. மல்லிகா தனி மரமானள். மரணப் படுக்கையில் சாவுடன் போராடிவிட்டு அவள் தந்தையும் விதிவழி ஏகிவிட்டார். தனக்குக் கல்யாணம் செய்து வைத்துக் கண்குளிரப் பார்க்கவேண்டுமென்றிருந்த அப்பாவின் கடைசி ஆசை திறைவேறக்கூடவில்லேயே என்ற நினைவு அவள் தளர்ந்த நெஞ்சைத் தள்ளாடச் செய்தது. தன் கல்யாண நினைவு ஒன்றிலேயே அவரது இறுதி மூச்சின் இழை பிரிந்ததென் வதை மில்லிகா எவ்விதம் மறப்பாள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/127&oldid=835365" இலிருந்து மீள்விக்கப்பட்டது