f 22 அவள் மனச்சாட்சி அவளேக் குத்திக் காட்டியது; குறை சொன்னது.
- அழகு மறைந்த தன்னே மணக்க உலகிலே அப்படி யார் முன் வரப் போகின்ருர்கள்? என்ற தீர்மானமான காரணமே அவளுக்கு வைராக்கியத்தைப் பலப்படுத்தி விட்டிருந்தது.
மரணச் சடங்குகள் ஒரு வழியாக முடிந்தன. "கடனு’க்கு வந்து மொய்த்த உறவினர்கள் திரும்பினர்கள். மல்லிகாவுக்குத் துணைக்கு ஒரு பாட்டி மட்டும் வீட்டோடு இருந்தாள். - - தன்னந்தனியே இருந்த அவளுக்குப் புதைந்த, ஞாபகங்கள் எல்லாம் அடிக்கடி புத்துயிர் பெற்றன. சென்ற ஆண்டுத் தொடக்கத்திலே இதே சமயம் அவள் இருந்த நிலவரமும், இப்போது அவளே ஆண்டவன் ஆக்கி யிருக்கும் அலங்கோலக் காட்சியும் இரு படித்தட்டுகளின் நிறையாக நிற்க, அவள் உள்ளுணர்வு சம்பவங்களேத் தராசு முனேயில் வைத்து எடை போட்டுப் பார்த்தது. அப்போது மல்லிகா அழகுக் குமரியாக, கனவுப் பதுமையாக, பேசும் பொற்சித்திரமாகக் காட்சியளித் தாள். ஆணுல் அவள் எழில் யார் கண்ணேக் கரித்ததோ ? அழகைப் பலி கொண்டது அம்மன். அவள் சிரித்தனளோ, இவள் அழுதுவிட்டாளே...அழுகின்ருளே...அழுது தீச்க்கக் காத்திருக்கின்ருளே...! வண்ண மலர் வாடிவிட்ட்து. பிறைமதி தேய்ந்தது. و و 2 باتی gr ک ک அதன் முடிவு...! -- - கிட்டத்தட்ட கடந்த ஒர் ஆண்டாக பத்திரிகை களுக்கு எழுதுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந் தாள் மல்லிகா, கொஞ்சம் வருவாயும் வந்தது. கலைத் தொண்டில் அவள் ஆறுதலைக் கண்டாள். தனிமை