பக்கம்:பூ மணம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 அவளுக்கு இனிதமளித்தது. மனச்சுமையும் நாளா வட்டத்தில் குறைந்து வந்தது. அவள் சிந்தித்தாள்; கதையும் கற்பனையும் பிணைந்தன. அவள் பேணு பிடித் தாள். அவள் எழுத்துக்கள் படிப்படியாக அச்சுவடிவம் பெற்றன. - மே ைஜமீது காற்றில் தாறுமாருகக் கிடந்த பழைய சஞ்சிகை ஒன்றைக் கையை நீட்டி எடுத்தாள். சிதைந்த காதல்’ கதையின் அச்சுப்பிரதி அது. முழுவதும் தன் நிலையைச் சித்திரித்திருக்கும் அக்கதையை அவள் மறு படியும் நினேத்துக் கொண்டாள். அச்சேறிய முதல் கதை ه jiتيjئي 'இதைமட்டும் ராஜேந்திரன் பார்த்திருந்தால்...ஆம்; அவர் பார்த்து என்ன ஆகப்போகிறது? ஆளுல் பெயர்களேக் கூட அப்படியே எழுதித் தொலைத்துவிட்டேனே...அதை லென்ன ? பத்திரிகை முகப்பில்தான் எல்லாம் கற்பனை என்பதற்கு விளம்பரம் காட்டியிருக்கிறதே! பிறகு...கதை வின் நாயகி தற்கொலேக்குள்ளாவதாக எழுதியிருந்ததை அவர் பார்த்து, அதேபோல நானும் ஆகிவிடுவேனே என்ருவது எண்ணிப் பார்த்திருப்பாரா ?...அவர் எதற்கு இனி என்னைப்பற்றி எண்ணப் போகிருர் ? இன்பத்தின் உச்சியில் அல்லவா அவர் இப்போது திக்கு முக்காடிக் கொண்டிருப்பார் ? அவரைப்பற்றி விணுக என் உள்ளத்தை அலட்டிக் கொள்வதற்கு நான் யார் ? அவர் யார் ?... எனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?...ஆம்; அவர். அவரைக் குறை சொல்லி என்ன பிரயோஜனம் ? எல் லோரும் கதைகளில் எழுதுகிருர்களே, அதுபோல விதியின் சதி என்றல்லவா கூறவேண்டும்?? - சில நாட்களாகப் புதிதாக எழுதத் தொடங்கியிருந்த நாவலொன்றில் அவள் கண்ணும் கருத்தும் இருந்தது. முன் ஒரு தினம் மாடியினின்றும் விழுந்து படுக்கையில் கிடந்து, வேதனை குணப்பட்டதும், நாவலுக்குரிய கதை யைப்பற்றி அவள் சிந்தித்தாள். தாயின் கருப்பையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/129&oldid=835369" இலிருந்து மீள்விக்கப்பட்டது