பக்கம்:பூ மணம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a 24 வளரும் சிசுபோலக் கதை அவள் சிந்தனையில் வளர்ந்தது. தாம்பத்திய வாழ்க்கையின் உணர்ச்சிச் சித்திரம் அது. தன் அனுபவத்துக்குப் புறம்பான பரீட்சையின் விளேவு தான் அது அனுபவம் கற்பிக்கும் சம்பவங்களே மட்டும் தான் அழகாக, இயற்கையாகச் சித்திரிக்க முடியும் என்ப தாகப் பலர் எழுதியிருக்கும் குறிக்கோள்பற்றி அவள் லட்சியம் செய்யவில்லே. கற்பனைவளம், அனுபவம் கற்பிக்கும் கருத்துக்களுக்கு வழிகாட்டியது. அவள் பேன உயிர் பெற்றது. - கதையின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் அவள் உள்ளமே முன் நின்று பேசுவது போலிருந்தது. அத்தகைய சம்பவங் களிலெல்லாம் அவள் பெண்மை சலனமுற்றுவிடும். பேஞ்ப்பிடித்த கரங்கள் அப்படியே முகக்தை ஏந்தி நிற்க, தன்னேயும் மறந்து யோகம் புரியும் முனிவரைப்போல ஆகி விடுவாள். மல்லிகாவின் கண்ணிர் கரைந்து காகிதங்களில் உருளும்; அதே சடுதியில் சில தெறித்துக் கன்னங்களிலும் மேனியிலுமாகப் பெருகும். உடலுணர்வு பெற்றதும் அவள் உணர்வும் உயிர் பெற்றுவிடும். மல்லிகா சுயநினைவு பெறுவாள். . ஒருநாள்...! குறைவிட்டிருந்த அத்தியாயத்தை முடித்துவிட்டுக் காற்ருட உட்கார்ந்திருந்தாள் மல்லிகா. கடந்த பல மாதங் களாகக் கதை எழுதுவது ஒன்றில் அதுவரை கண்டிராத அமைதியையும் ஆனந்தத்தையும் அவள் அனுபவித்தாள். இந்தப் புது அனுபவம் அவளுக்கே ஆச்சரியமாகக்கூட இருந்தது. அப்போது அவள் சிநேகிதி விஜயா வந்தாள். சமீ. பத்தில் ஏற்பட்ட தொடர்பு. எனினும் பல ஆண்டுகள் மீனமொருமித்துப் பழகின்துபோல நட்புரிமை கொண்ட வர்கள். நட்பு ஒரு வகையில், தொட்டால் ஒட்டிக் கோள்ளும் பன்ச் போல. - 3... . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/130&oldid=835373" இலிருந்து மீள்விக்கப்பட்டது