பக்கம்:பூ மணம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 அவன் உள்ளம் உணர்ந்து கொண்ட தவறுக்குப் பிராயச் சித்தமாக வடித்தெடுத்த நீர்த்துளிகள் படத்தின் மேல் படிந்து சாட்சி சொல்லி நின்றன. அடுத்த தடவை மீண்டும் டிராயருக்குள் கையைத் திணித் தான். இம்முறை உறைக் கடிதம் ஒன்று வந்தது. அதன் விலாசத்தைப் பார்த்தான். பல இடங்களில் சிவப்பு மையில்ை கிறுக்கப்பட்டு, விலாக தாரர் இல்லாமையால், எழுதிய அவனுக்கே கடிதம் திரும்பிவிட்டிருந்தது. அவனது நடுங்கும் விரல்கள் கடித உறைமீது தவழ்ந்தன. இமைப்பில் கண்ணிரைக் காணிக் கையாக்கித் தீட்டிய ஒரு இதய ஒலிக்கடிதம் அவன் முன் பேசத் தொடங்கியது.

  • அன்பு பூமா, -

நீ என் அன்பின் தெய்வம். என்ருே உணர்ந்ததுண்டு இந்த உண்மையை, இன்றும் உணர்கிறேன். இருந்துமா என்னைத் துண்டித்துவிட்டீர்கள் ?’ என்கிருயா, கண்ணே! அதற்கு தண்டனையை நான் அல்லும் பகலும் அனுபவிக்கி றேனே, இதை உன்னிடம் யார் வந்து சொல்லப் போகிருர்கள்! நீ என்னேப் பிரிய, நான் உன்னே ப் பிரிய, இணை உயிர் இணை உடலேப் பிரிய நேரிட்ட இத ைவிதியின் சிரிப்பு என்பதா ?...நடந்து முடிந்ததற்கு விளக்கவுரைப் போட்டி எதற்கு , நடப்பதற்கேற்ற காரண காரியங்கள் குறித்து...? மெய்தான். கண் பறிக்கும் ஒளி சிந்தும் கடல்முத்து எந்தக் கடலின் அடிவயிற்றினுள் தஞ்சம் புகுந்து கொண்டதோ ?... . கடந்ததெல்லாம் கண்ணிருடன் கழியட்டும், கனவாய், பழங்கதையாய். கொண்டவன் இழைத்த கொடுமைக்குப் பரிகாரம் கோருகிறன். தயைகாட்டு பெண் என்ற உயிர்ப்பண்பில் நின்று. பெண் எனில் இரங்கும் தயாநிதி என்று தியாக நோக்கில் உன்னை நிறுத்தி,உன்னே க் காண, உன் இன்முகங்காண. உயிர்க்காவியம் புனையும் உனது காவியக் கண்களைக் காண, ரகசியத்தைக் கணத்துக்குக் கணம் தோற்றுவித்து, மறைந்து, என்ன வெறியனுக்கிய பூ-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/139&oldid=835390" இலிருந்து மீள்விக்கப்பட்டது