பக்கம்:பூ மணம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 34 அந்த உன் துடிக்கும் செவ்வதரங்கள் காண என் ஆவி, உயிர், உடல் எல்லாம் இரவு பகலாகத் துடிக்கிறது. விபரங்கள் குறித்து மறு தபாலில் தயைசெய்து பதில் எழுது வாயா ? ராஜேக்திரன்.’’ குமுங்கும் நெருப்புக்கும், அதன்மீது உறங்கிக் கிடக்கும் சாம்பல் திரைக்கும் இடையேயுள்ள உறவு நிலேபோல அமைந்திருந்தது அப்போதைய அவனது உள்ளமும், உள்ளத்தின் எதிரொலியாக - உள்ளத்தின் உள்ளமாகக் கிடந்த அந்தக் கடிதமும், ஆளுல் நினைவுகள் மட்டும் நீறுபூத்த நெருப்பாகி விடமாட்டேன் என்கின்றனவே! பூமா, நீ என் உயிர்த்துணை; உயிர்ப்பின் உயிர். என்ருலும் அபாக்கியவதியாகிவிட்டாய். நான் உன்னே அப்படி ஆக்கிவிட்டேன். நான் அல்ல-என்னுள் ஏதோ ஒரு சக்தி-ஏதோ ஒரு வெறி என்ன ஆட்டிப்படைத்தது. மனச்சாட்சியின் வேதனே தாங்கமாட்டாமல் அப்படி அன்று உன்னை அடித்துப் போட்டேன். நான் இதயமற்ற பாவி. எனக்கு மன்னிப்பே இருக்கமாட்டாது. என் உயிருள்ள பரியந்தம் நான் உன்னேக் கண்போலக் காப் பாற்றுகிறேன்’ என்று அக்கினி சாட்சியாகத் தாலிகட்டிய நான் கடைசியில் உன்னேக் கைவிட்டுவிட்டேன். நான் எழுதிக் கையெழுத்திட்டுத் தந்த வாழ்க்கைச் சாசனத் தையும் காற்றில் பறக்கவிட்டு, ஆனால் நான் இதோ காற்றில் பஞ்சாய்ப் பறக்கிறேன். ஆனல் அந்த ஒன்றிரண்டு நாட்களின் போக்கு மாத்திரம் நெடுக நீடித் திருந்தால்...நான் பிரமைபிடித்து அலேந்திருப்பேனே என்னவோ? பித்துப் பிடித்துத் தெருவெல்லாம் பேயாய்ச் சுற்றித் திரிந்திருப்பேனே என்னவோ ?...ஆனல் சம்பவங் கள், வாழ்க்கைக்குத் திரும்பு புள்ளிகள். அன்று மாத்திரம் அச்சம்பவம் நிகழ்ந்திராது போனுல்...? :: * தவறுகள் செய்வது மனித இயல்பு செய்த தவறுகளே உண்ரும் கட்டமும் வாழ்வின் புனிதவேளே போலத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/140&oldid=835394" இலிருந்து மீள்விக்கப்பட்டது