பக்கம்:பூ மணம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 ஆளுல் இந்த விதி எல்லோருக்குமே கட்டுப்படுவதில்லையே! ஏன் ? இந்த டைரக்டர்கூட அப்படித்தான். ஆம்; இந்த டைரக்டர்தான் ராஜேந்திரன் ஆல்ை அதே ராஜேந் திரன் தன்னப்பற்றிய உணர்வில், தன் தவறுகளுக்குஅவன் தன் துனேவி பூமாவுக்கு அநீதியாக, அநியாயமாக விளேத்த இன்னல்களுக்கு, தீவினைகளுக்கு இப்போது வருந்தின்ை. அவன் விழிச் சிமிழ்களில் கண்ணிர் இருந்தது. இதயம் பிறப்பித்த உணர்வினது பிராயசித்தச் சின்னமாக, கோவையில் அழகோவியம்: ஸ்டுடியோவின் உரிமை பாளருக்கு ராஜேந்திரன் பெரிதும் கடமைப்பட்டவன். ஸ்டுடியோ டைரக்டர் சந்திரமெளலி கடந்த சில மாதங் களாக நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகி விட்டதி லிருத்து, ஸ்டுடியோவின் முழுப் பொறுப்பையும் டைரக்டர் பதவியிலிருந்து கவனித்து வரும் உரிமையை சந்திர சேகரன் ராஜேந்திரனுக்குக் கொடுத்தார். - சந்திரமெளலியின் மேற்பார்வையில் வெளியான முதல் படம் அன்னபூமி. முதலதே முழு வெற்றியாகப் பரிண மித்தது. அது தேடித்தந்த புகழிலும் பணத்திலும் அடுத்த படத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தான் ராஜேந்திரன். - அடுத்ததாக எடுக்கப்படவிருக்கும் படத்திற்க து உரிமையாளர் சந்திரசேகரன் இரண்டு முறை பம்பாய் முதலிய இடங்களுக்குப் பிரயாணம் செய்து திரைப்பட துணுக்கங்கள் பலவற்றை அறிந்து வந்தார். புதுப் படத் திற்கான கதைக்கும் வேண்டிய ஏற்பாடுகள் செய்து அன்றைக்குக் கடிதம் எழுதிவிட்டான். அதில் ராஜேந்திர னுக்கு முழு நிம்மதி. அந்தக் கடிதம் மாத்திரம் நல்ல் புதிலேக் கொண்டு வந்துவிட்டால்...? அப்புறம் புடத்தின் வெற்றிக்குக் கேட்கவே வேண்டியதில்லையல்லவா?... ஆகா...! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/141&oldid=835396" இலிருந்து மீள்விக்கப்பட்டது