பக்கம்:பூ மணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பீரோவில் அணி வகுத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. புத்தகங்கள் ; பொழுதுபோக்குச் சாதனமாக அல்ல-ராஜேந்திரனது பட்டத்திற்குரிய அறிவுக்குவியல் அழகுத்திரளாகக் காட்சி தந்தது. ஆங்கிலம், தமிழ், சரித்திரம், பொருளாதாரம், அரசியல்...! பி.ஏ! அவனிடமிருந்து பெருமூச்சுத் தொடர் புறப்பட்டது. இன்று வரும் பரீட்சை முடிவுபற்றி நேற்று ராஜேந்திர னுக்கு என்னென்ன எண்ணங்கள் நெஞ்சில் சுற்றிச் சுழன்றன? 'பாஸ் ஆகிவிடுமல்லவா?’ என்று அடிக்கொரு முறை தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டு மனம் புழுங்கினன். நிச்சயம் பரீட்சை வெற்றிதான் என்னும் துணிவு கடைசிப் பரீட்சை எழுதி முடித்த அன்றே ஏற்பட்டது. என்ருலும், இனம் விளங்காத திகில் அவனேயு மறியாமல் பற்றிப் படர்ந்திருந்தது. அவன் சிந்திந்தான். அதே மின்வீச்சில் பரீட்சை தேறிவிடும்’ என்று ஓர் உள்ளுணர்வு இதயத்தின் ஓர் முடுக்கிலிருந்து அமைதி சொல்லிற்று. ராஜேந்திரன் பி.ஏ. தேறிவிட்டான்! ஒரே ஓட்டமாக ஒடித் தன் அண்ணனிடம் செய்தியை வெளியிடத் துடித்தது அவன் உள்ளம். தன்னே ஒரு பட்ட தாரியாக ஆக்கிவிடும் எண்ணத்தில் தன் தமையன் எடுத்துக்கொண்ட முயற்சிகளே அடுக்கடுக்காக எண்ணிப் பார்த்தான் : தனக்காக எத்தனையோ இன்னல்களே அனுபவித்துத் தன் உயிரைக் கொடுத்துத் தன்னை ஆனாக்கி, தன் வளர்ச்சியில் பெருமை காணத் தவிக்கும் சகோதரனுக்கு ராஜேந்திரன் மிகவும் கடமைப்பட்டிருக் கிருன். தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவ்விடத்தில் நின்று குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு மூத்தவன் ஆனந் தனின் தலையில்தான் விழுந்தது. அவனுக்கு அரசாங் கத்தில் நல்ல பதவி. சகோதரர் இருவரும் ஒருவரை யொருவர் நேசித்தனர்; அன்பு பாராட்டினர்; பாசத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/14&oldid=835392" இலிருந்து மீள்விக்கப்பட்டது