பக்கம்:பூ மணம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 ஆமாவை அடித்துப் போட்டுவிட்டுப் புறப்பட்ட ராஜேந்: திரன், எங்கோ கால் இழுத்த போக்கில், மனம் வகுத்தி. வழிக்கோட்டில் நடந்தான். அவனைச் சுற்றிப் பூமாவும், மல்லிகாவும் நிழலாகத் தொடர்ந்து அவன் நெஞ்சைத் தூண்டில் முள்ளிட்டு இழுத்து முடுக்கிக் கொண்டிருந் தார்கள். அவன் உணர்ந்தான்; உணர்வின் வேதனை அவனே நெஞ்சுலரச் செய்தது. ஒரு பக்கம் அவன் கைவிட்ட மல்லிகா; மறுபக்கம் கைவிடப்பட்ட அபலே மனயாள் பூமா. மல்லிகா அவனேக் கொல்லாமல் கொன் ருள். ஆம்; அவள் நினேவின் உரு அப்படி அவனேச் செய்தது. அவன் துடித்தான். உயிர்த் துடிப்பே நின்று விட்டது போல இரண்டுங்கெட்டானகப் பித்துப் பிடித்த வகை ராஜேந்திரன் ஒடினன்; ஒடிக்கொண்டிருந்தான். கும்பிருட்டிலே, குமையும் மனத்துயரைத் தாங்கிக் கொண்டு, வழிமறைத்திருந்தது எதிர்காலம், அவன் ஓடிக்கொண்டுதான் இருந்தான். அவன் நினைவு அவனுக்கு இல்லே. ஏதோ ஒரு மயக்கம். பித்தம், உள்ளக் குமட்டல்எதுவும் அல்ல; வெறிதான்! நடை, பஸ், ரயில், டிராம்-ராஜேந்திரன் சுழன்றன். பர்ஸில் தங்கின. சில்லரைகள் செல்லத் தயாராயின. அவனுக்குத் தெரியமாட்டாது. அவன் நிமிர்ந்தான். அலேகடல் ஆர்ப்பளித்துக் கொண்டிருந்தது. தகடு விரிந்து விம்மி வீங்கியெழும் அலேகள் மீது நிலவுக் கதிர்கள் கொஞ்சி விளேயாடிக் கொண்டிருந்தன. -- ராஜேந்திரன் சமுத்திரத்தை வெறித்துப் பார்த்தான். இரவில், பார்க்கப் பயங்கரமாக உருமிக் கிடந்தது கடல். பொங்கும் கடல் முன் பொங்கும் உள்ளத்துக்குத் துளி நிம்மதி வேண்டி நின் ருனே என்னவோ ! ஆனல் மாலை என்ருல் அலைகடல். எத்தன.எத்தனை உள்ளங்களே அலே ஓய்ந்த கடலாக்கி, சாந்தியையும் சீதனமாகக் கொடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/143&oldid=835402" இலிருந்து மீள்விக்கப்பட்டது